districts

img

வெறும் கூலி அல்ல; சமூகப் பாதுகாப்புடன் வேலை வேண்டும்

உடுமலை, ஜூலை 27 - வேலை என்பது வெறும் கூலி  பெறுவதற்கல்ல, சமூகப் பாதுகாப் புடன் கூடிய வேலை வேண்டும் என்ற முழக்கத்துடன் திருப்பூர் மாவட்டத்தில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது. சமூக பாதுகாப்புடன் கூடிய வேலைக்கான இயக்கம் (மெஸ்) சார்பில் ஆகஸ்ட் 1ஆம் தேதியன்று சென்னையில் மாபெரும் மாநாடு நடத்தப்படுகிறது. எங்கே எனது வேலை, எங்கே எனது சமூக பாது காப்பு என்ற முழக்கத்துடன் நடை பெற உள்ள இந்த மாநாட்டு விளக்கப் பிரச்சாரம் அனைத்து  மாவட்டங்களிலும் நடத்தப்படு கிறது. அதன் ஒரு பகுதியாக. திருப் பூர் மாவட்டத்தில் உடுமலைப் பேட்டை உழவர் சந்தை அருகே வியாழயன்று தொடங்கியது. சிஐடியு தமிழ் மாநிலப் பொதுச் செயலாளர் ஜி.சுகுமாரன் இந்த பிரச்சார இயக்கத்தைத் துவக்கி வைத்துப் பேசினார். இந்த பிரச்சாரத்தில், அனைவ ருக்கும் சமூகப் பாதுகாப்புடன் வேலை என்பதை அடிப்படை உரிமையாக்கி சட்டம் இயற்ற வேண்டும். குறைந்தபட்ச ஊதியம்  ரூ.26 ஆயிரம் என்பதை உறுதிப் படுத்த வேண்டும். வேலையில்லா காலத்தில் தரப்படும் நிவார ணத்தை உயர்த்த வேண்டும். நகர்ப் புற வேலை உறுதி சட்டத்தை அனைத்து பகுதிகளிலும் அமல் படுத்த வேண்டும். ஊராக வேலை திட்டத்தின் வேலை நாட்களை 200  நாட்களாக உயர்ந்த வேண்டும்.  சம வேலைக்கு சம ஊதியம்  என்ற முறையை அனைத்து வேலை களுக்கும் நடைமுறைப்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை  வலியுறுத்தப்பட்டது. முன்னதாக, உடுமலையில் தொடங்கிய பிரச்சாரத்திற்கு மாண வர் சங்கத்தின் மாவட்டச் செயலா ளரும், மெஸ் துணை அமைப்பாள ருமான பிரவீன் தலைமை ஏற்றார். மெஸ் அமைப்பாளரும், மாதர் சங்க மாவட்டத் தலைவருமான எஸ்.பவித்ரா, துணை அமைப்பா ளரும், வாலிபர் சங்க மாவட்டத் தலைவருமான எஸ்.அருள் உட்பட சிஐடியு நிர்வாகி கே.காமராஜ், மாவட்டப் பொருளாளர் ஜி. சம்பத், நிர்வாகிகள் உடுமலை ஜெகதீசன், விஸ்வநாதன், ஜோசப்,  செல்வராஜ், ஈஸ்வரன், சுதா சுப்பிர மணியன்,

ஆஜீக்அலி, பாபு, விவ சாய சங்கத்தின் நிர்வாகிகள் எஸ்.ஆர்.மதுசூதனன், ஆர்.குமார்,  பாலதண்டபாணி, ராஜகோபால், எம்.எம்.வீரப்பன்,  மாதர் சங்கத்தின்  கு.சரஸ்வதி, சித்ரா, விவசாய தொழிலாளர் சங்கத்தின் அ. பஞ்சலிங்கம், ஜி.சுந்தரம், மாற்றுத்  திறனாளிகள் சங்க மாவட்டச் செய லாளர் பா.ராஜேஸ், பிஸ்என்எல் ஊழியர் சங்க நிர்வாகி கல்யாண ராமன், சக்திவேல் ஓய்வூதியர் சங் கத்தின் செல்லதுரை, தாசன், கருணாநிதி உள்ளிட்ட திரளானோர்  கலந்து கொண்டனர். பின்னர் பிரச்சாரப் பயணத் திற்கு குடிமங்கலம் நால் ரோட்டில்  விவசாய சங்கத்தின் தலைவர் சுந்தர்ராஜ் தலைமையில் வர வேற்பு அளிக்கப்பட்டது. இதில்  மாதர் சங்கத்தின் சசிகலா, ராஜாத்தி, விவசாய சங்கத்தின் மகேந்திரன், விவசாய தொழி லாளர் சங்கத்தின் தம்புராஜ், ஆறு முகம், முருகவேல் உள்ளிட்ட திரளனோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் சிஐடியு மாவட்டப் பொருளார் ஜி.சம்பத்  சிறப்புரையாற்றினார். இதை யடுத்து பிரச்சார பயணம் பல்லடம்  பேருந்து நிலையம் சென்றது. அங் கிருந்து அவிநாசி பேருந்து நிலை யம், ஊத்துக்குளி டவுன் மற்றும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவ லகம், திருப்பூர் குமரன் நினை வகம் ஆகிய இடங்களில் பிரச் சாரம் மேற்கொண்டு அனுப்பர் பாளையத்தில் நிறைவடைந்தது. இங்கு மார்க்சிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் உரையாற் றினார்.