திருப்பூர், ஜூன் 28 - திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டப் பணிகள் குறித்து நகராட்சி நிர்வாக இயக்குநர் பி.பொன்னைய்யா கள ஆய்வு மேற்கொண்டார். திருப்பூர் மாநகராட்சி மைய அலுவலக வளாக கூட்டரங் கில் புதனன்று நகராட்சி நிர்வாக இயக்குநர் பி.பொன் னைய்யா மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து ஆணையாளர் பவன்கு மார் ஜி.கிரியப்பனவர் தலைமையில் அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். மேலும், நடைபெற்று வரும் பணி களை விரைவில் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்கவும், நடைபெற்று வரும் பணிகள் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் மேற்கொள்ளவும் அலு வலர்களுக்கு அறிவுறுத்தினார். முன்னதாக, சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் திருப்பூர் மாநக ராட்சியில் ரூ.54.36 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மாநாட்டு அரங்கம், ரூ.31.18 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் மேம்பாடு மற்றும் ரூ.26 கோடி மதிப்பீட்டில் நடராஜ் தியேட்டர் அருகில் அமைய உள்ள புதிய உயர்மட்ட பாலம் கட்டும் பணிகள் ஆகியவற்றை பார்வையிட்டு கள ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வில் தலைமை பொறியாளர் எஸ். வெங்கடேஷ், துணை ஆணையாளர்கள் கே.பாலசுப்ரமணி யன், அ.சுல்தானா, துணை மாநகர பொறியாளர்கள் சி.கண் ணன், பி.வாசுகுமார், ஆர்.செல்வநாயகம், உதவி ஆணை யாளர்கள் ஆர்.முருகேசன் ஆர்.வினோத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.