districts

பேராசிரியைக்கு பாலியல் தொல்லை- முதியவர் கைது

கோவை. நவ.29- ஓடும் ரயிலில் கல்லூரி பேராசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்த கோவையைச் சேர்ந்த 60 வயது முதியவரை காவல் துறையினர் கைது செய்தனர். சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரியும்  39 வயது பெண் ஒரு வர்  கோவையில் உள்ள தனது உறவினரை பார்க்க வந்திருந்தார். பின்னர் கோவையில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னைக்கு புறப்பட்டார்.

இந்நிலையில், இரவு 10 மணியளவில் அந்த ரயில் காட்பாடி அருகே சென்று கொண்டிருந்தபோது, அவரது இருக் கைக்கு அருகே அமர்ந்து பயணம் செய்த முதியவர் ஒருவர் அந்தப் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பேராசிரியை கூச்சலிட சக பயணிகள் அவரை பிடித்து ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத் தனர். விசாரணையில் அவர் கோவை ஒண்டிப் புதூர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (61) என்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.

;