districts

img

கர்ப்பிணி உயிரிழப்பு: உறவினர்கள் மறியல்

கோவை, செப்.24- அன்னூர் அரசு மருத்துவமனையில் மின் தடையால் அறுவை சிகிச்சை செய்ய முடியா மல், கர்ப்பிணி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில், அவரது உறவினர்கள் திடீர் மறியலில் ஈடு பட்டனர். கோவை மாவட்டம், அன்னூரை அடுத்த ஊத்துப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த வர்கள் விக்னேஸ்வரன் - வான்மதி தம்பதியி னர். விக்னேஸ்வரன் தனியார் பனியன் கம்பெ னியில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், நிறைமாத கர்ப்பிணியான தனது மனைவி  வான்மதியை அன்னூர் அரசு மருத்துவம னைக்கு பிரசவத்திற்காக அழைத்து வந்துள் ளார். அப்போது வான்மதிக்கு அறுவை  சிகிச்சை மேற்கொண்டபோது மருத்துவம னையில் மின்தடை ஏற்பட்டது. உரிய நேரத் தில் ஜெனரேட்டர் வேலை செய்யாததால் வான்மதிக்கு தொடர்ந்து அறுவை சிகிச்சை மேற்கொள்ள இயலாத நிலை உருவானது. இதையடுத்து வான்மதி அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக் கப்பட்டார். அங்கு அவருக்கு ஆண் குழந்தை  பிறந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக தாயும், சேயும் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். அங்கு வான்மதிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி சனி யன்று காலை உயிரிழந்தார். இதனால் ஆவேசமடைந்த அவரது உற வினர்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் அன் னூர் அரசு மருத்துவமனையை முற்றுகை யிட்டு வான்மதியின் உயிரிழப்புக்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப் போது அரசு மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியமான செயல்பாடு காரணம் என குற்றஞ்சாட்டிய உறவினர்கள், அரசு மருத்து வமனையில் அலட்சியமாக செயல்பட்ட மருத்துவ ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத் திற்கு வந்த மேட்டுப்பாளையம் காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையிலான காவல் துறையினர் போராட்டக்காரர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதனிடையே சிலர் திடீர் மறியலில் ஈடுபட்டதால் அன்னூர் - கோவை சாலையில் போக்குவரத்து பாதிக் கப்பட்டது. அதேபோல அன்னூர் உதகை சாலையிலும் போக்குவரத்து நெரிசல் ஏற் பட்டது. சாலையில் அமர்ந்திருந்த ஆர்ப்பாட் டக்காரர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கியதால்  தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனை வளாகத் தில் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் அன்னூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பான சூழல் நிலவி வரு கிறது. முன்னதாக போராட்டத்தில் ஈடுபட்டி ருந்த அன்னூர் பேரூராட்சியின் கவுன்சில ரும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின்  முன்னாள் மாவட்ட தலைவருமான மணிகண் டன் கூறுகையில், அன்னூர் அரசு மருத்துவ மனையில் போதிய உபகரணங்கள் இல்லை, மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறை உள்ளது. இதனை தாலுகா தலைமை மருத்து வமனையாக தரம் உயர்த்த வேண்டும் என்று  தொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சி, வாலிபர் சங்கம்  வலியுறுத்தி வருகிறது. சமீபத்தில்கூட தமிழக முதல்வரை சந்தித்து அன்னூர் அரசு மருத்து வமனையை தரம் உயர்த்த வேண்டும் என்கிற கோரிக்கையையும் வைத்திருந்தோம். ஆனால் எவ்வித முன்னேற்றமும் ஏற்பட வில்லை. இப்போது மின்தடையும் ஏற்பட்டு,  அவசரத்திற்கு இயங்க வேண்டிய ஜெனரேட் டர் இயங்காததால் தனியார் மருத்துவம னைக்கு கர்ப்பினியை அனுப்ப வேண்டிய சூழல் ஏற்பட்டது. இப்போது அந்த தாய் பரி தாபமாக உயிரிழந்துள்ளார். பச்சிளம் குழந் தையை கையில் ஏந்தி உறவினர்கள் கதறி அழுகிறார்கள். இக்குடும்பத்திற்கு நீதியும், நிவாரணமும் வழங்க வேண்டும். இனியும் இதுபோன்ற உயிரிழப்புகள் ஏற்படாமல் இருக்க மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும். இல்லையென்றால் மக்களை திரட்டி தொடர் போராட்டத்தை முன்னெடுப் போம், என்றார்.

;