districts

img

கோவையில் 7,458 பணிகளில் 4,035 பணிகள் முடிந்துள்ளது

கோவை, செப்.13- கோவை மாவட்டத்தில் அனைத்து அர சுத்துறை சார்பில் முன்மொழியப்பட்டு, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட 7458 திட்டங்களில் 4035 பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இதர திட்டப்பணிகளையும் விரைந்து முடித்திட வேண்டும் என மாவட்ட வளர்ச்சி கண்கா ணிப்புக்குழு கூட்டத்தில் பி.ஆர்.நடராஜன் எம்.பி., வலியுறுத்தினார். கோவை மாவட்ட வளர்ச்சி ஒருங்கி ணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் அக்குழுவின் தலைவர், கோவை நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலை மையில் செவ்வாயன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், கண்காணிப்புக் குழு துணைத் தலைவர் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப் பினர் கு.சண்முகசுந்தரம், மாநகராட்சி ஆணை யாளர் மு.பிரதாப், மாவட்ட வன அலுவலர் அசோக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர்  ப்பி.எஸ்.லீலாஅலெக்ஸ் உள்ளிட்ட  அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.  

இக்கூட்டத்தில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் பேசுகையில், மாவட்ட வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுவின் நோக்கம் அரசுகளின் திட்டங்களை செயல்படுத்தும்போது அவை மக்கள் பிரதிநிதிகளால் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்டுள் ளது. கோவை மாவட்டத்தில்  பல்வேறு  வளர்ச்சி திட்டப்பணிகள் செயல்படுத்தப் பட்டு வருகிறது. அதன்படி, மாநகராட்சியில் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் குளங்கள் புனர மைப்பு மற்றும் மேம்பாட்டு பணிகள், எல்இடி மின்விளக்கு அமைக்கும் பணிகள், குடிநீர் திட்டம், அடுக்குமாடி வாகனம் நிறுத்துமிடம், பாதாள சாக்கடை திட்டம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணி களை விரைந்து முடித்து பொதுமக்கள்  பயன்பாட்டிற்கு கொண்டுவரதேவையான  நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.  ஊரக வளர்ச்சி மற்றும்   ஊராட்சித்துறை சார்பில் 2021-22 ஆம் ஆண்டில், ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டிடம், அங்கன்வாடி மையம், உணவு  தானிய கிடங்கு, பள்ளி கட் டிடங்களுக்கு சுற்றுச்சுவர், சிறுபாலம், தடுப் பணை, சிமெண்ட் கான்கிரீட் சாலை  உள்ளிட்ட 7,458 பணிகளில் 4,035 பணிகள் முடிவுற்று உள்ளன.

மீதமுள்ள பணிகள் நடைபெற்று வருகின்றன. நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளுர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 2 021-22 ஆண்டில் கோவை மாநகராட்சி,   சூலுார், சுல்தான்பேட்டை, பெரியநாயக்கன் பாளையம், அன்னூர் ஆகிய வட்டாரங்கள்,  கூடலூர் நகராட்சி உள்ளிட்ட பகுதிகளில் ரூ.468.58 லட்சத்தில் 33 பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண் டும் என்றார்.  முன்னதாக இக்கூட்டத்தில், நெடுஞ்சா லைத்துறை தேசிய சுகாதார இயக்கம், தூய்மை பாரத இயக்கம், 15-வது நிதிக்குழு அடிப்படை மானியம், ஆகிய திட்டங்கள்,  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறு தித் திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் கீழ் நடை பெற்று வரும் பணிகளின் விவரங்கள் குறித்து சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஆய்வு செய்யப்பட்டது. தற்போது நடை பெற்று வரும் பணிகளை துரிதப்படுத்தி உரிய காலத்திற்குள் பணிகளை விரைவாக முடிக்க துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட் டது. அனைத்து துறைகளிலும்,  அரசால்  செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை உரிய திட்டமதிப்பீட்டின் அடிப்படையில் முறை யாக செயல்படுத்தி, பணிகளை விரைந்து முடித்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பி.ஆர்.நடராஜன் எம்பி கேட்டுக்கொண்டார்.

;