districts

img

பி.ஆர்.நடராஜன் எம்.பி., நிதி ரூ.17 லட்சத்தில் பல்நோக்கு மையக்கட்டடம் அமைச்சர் திறந்து வைத்தார்

திருப்பூர், ஜூலை 13 – திருப்பூர் ஊராட்சி ஒன்றியம், இடு வாய் ஊராட்சிக்குட்பட்ட சீராணம் பாளையத்தில் கோவை நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன்  தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.17 லட்சத் தில் கட்டப்பட்ட பல்நோக்கு மையக்  கட்டடத்தை மாநிலத் தமிழ் வளர்ச்சி  மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு. பெ.சாமிநாதன் வியாழனன்று திறந்து வைத்தார். இந்நிகழ்விற்குத் தலைமை ஏற்ற  கோவை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் அங் குள்ள பொருள் இருப்பு அறையைத்  திறந்து வைத்தார். திருப்பூர் ஊராட்சி  ஒன்றியம் இடுவாய், மங்கலம் ஊராட் சிகள் மற்றும் சமளாபுரம் பேரூராட்சி பகுதிகளில் ரூ.2.21 கோடி மதிப்பீட் டில் சாலை மேம்பாட்டுப் பணி, வடி கால் வசதி, கீழ்மட்ட தொட்டி உள் ளிட்ட பணிகளையும் அமைச்சர் சாமி நாதன் துவக்கி வைத்தார். அத்துடன்  ரூ.47 லட்சம் மதிப்பீட்டில் முடிவ டைந்த திட்டப் பணிகளையும் அவர்  திறந்து வைத்தார். இடுவாய் ஊராட்சியில் நடை பெற்ற நிகழ்வில் இடுவாய் ஊராட்சி மன்றத் தலைவர் கே.கணேசன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், தெற்கு ஒன்றியச் செயலாளர் சி.மூர்த்தி உள் ளிட்டோர் கலந்து கொண்டனர். மங்கலம் ஊராட்சி காந்தி நகரில்   ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட  1லட்சம் லிட்டர் கொள்ளளவு தரை மட்ட நீர்தேக்கத் தொட்டி மற்றும் 15 ஆவது நிதிக்குழு மானிய திட்டத் தின் கீழ் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில்  கட்டப்பட்ட 60 ஆயிரம் லிட்டர் கொள் ளளவு மேல்நிலை நீர்தேக்கத் தொட் டியை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து  வைக்கப்பட்டது.  இந்நிகழ்ச்சியில் திருப்பூர் சார்  ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் நாராய ணன், உதவி இயக்குநர் (ஊராட்சி கள்) மதுமிதா, திருப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜோதிலிங்கம், உதவி பொறியாளர் கற்பகம், மங்க ளம் ஊராட்சி மன்றத்தலைவர் எஸ். எம்.மூர்த்தி, உள்ளாட்சி அமைப்புக ளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.