திருப்பூர், செப்.8- கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டம் சோமனூ ரில் நடைப்பெற்றது. இக்கூட்டத்சதிற்கு விசைத்தறி உரிமை யாளர் சங்கங்களின் கூட்டமைப்பு தலை வர் பழனிசாமி தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் அவர் கூறி யதாவது: 8 ஆண்டுகளாக ஒப்பந்தபடி, கூலி உயர்வு இல்லாமல் விசைத்தறிகளை இயக்கி வருகிறோம்.நூல் விலை உயர்வால் தொழில் முடங்கியுள்ளது.இந்நிலை யில், விசைத்தறிகளுக்கு யூனிட் ஒன்றுக்கு 1.40 ரூபாய் மின் கட்டணம் உயர்த்தி அறி வித்தது அதிர்ச்சியை ஏற்படுத் தியுள்ளது குறைந்தபட்ச கூலியை பெற்று தொழில் செய்கிறோம். இதை நம்பி பல்லாயிரம் தொழிலாளர்கள் உள்ளனர்.மின் கட்டணத்தை உயர்த்தி னால் விசைத்தறி மற்றும் சார்பு தொழில்கள் முடங்கி விடும். மின் கட்டண உயர்வில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்காவிட் டால் வேலை நிறுத்தம் செய்வது என முடிவு செய்துள்ளோம், என்று கூறினார்.