districts

img

விசைத்தறி தொழிலை, தொழிலாளர்களை காப்பாற்றுங்கள் மின்துறை அமைச்சரிடம் விசைத்தறியாளர்கள் முறையீடு

ஈரோடு, செப்.20- ஒன்றிய அரசின் அழுத்தத்தால் தமிழக அரசு உயர்த்தியுள்ள மின்  கட்டணத்தால் வாழ்வாதாரம் பாதிக் கப்படும் என சென்னை தலைமை செயலகத்தில் மின்துறை அமைச் சரை சந்தித்து முறையிட்டுள்ளனர். ஈரோடு, கோவை, திருப்பூர் மற் றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்க ளில் சுமார் 6 லட்சம் விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இங்கு கிரே எனப்படும் காடா துணி நெசவு செய் யப்படுகிறது. இரவு, பகல் என 24  மணி நேரமும் இயங்குவதால் இரண்டு மாதங்களுக்கு சுமார் 6  ஆயிரம் யூனிட் வரை மின்சாரம் செல வாகும். எனினும் விசைத்தறியாளர் கள் கூலி அடிப்படையில் தான் நெசவு செய்து வருகின்றனர். தொழில் மந்த நிலை, அதனைத் தொடர்ந்து பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரி விதிப்பு மற்றும் கொரோனா தொற்று போன்ற காரணங்களாலும், கடந்த 2014  ஆம் ஆண்டிற்குப் பிறகு கூலி உயர்த் தப்படவில்லை. இந்நிலையில் தங்கள் அரசு அமைந்த பிறகு கடந்த 6 மாதங்க ளுக்கு முன் ஒரு மீட்டருக்கு 70 பைசா  வீதம் கூலி உயர்வு கிடைத்தது. இதை  வைத்துத்தான் தொழிலாளர்களுக் கான கூலி, கொரோனாவிற்குப் பிந் தைய உதிரிபாகங்கள் விலை உயர்வு, ஆயில் விலை உயர்வு ஆகியவற் றின் விலைகளை சமாளிக்க வேண்டி யுள்ளது. மேலும், அபரிமிதமான பஞ்சு, நூல் விலை உயர்வு காரண மாக உற்பத்தி பாதிக்கப்பட்டு விசைத் தறிகள் சரிவர இயங்காமல் உள்ளது. இவ்வாறு விசைத்தறியாளர்கள் மற் றும் விசைத்தறி தொழிலாளர்கள் மற் றும் இதனைச் சார்ந்துள்ள பலவகை தொழில்களும், தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். மின் கட்டண உயர்விற்கு ஏற்ப உற் பத்தி செய்யப்படும் காடா துணிக்கு கூலி உயர்வு கிடைக்காது.

ஆகவே விசைத்தறிக்கு உயர்த்திய மின் கட் டணத்தை ரத்து செய்தும், ஆண் டுக்கு 6 சதவிகித உயர்வினையும் ரத்து செய்து லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத் தைக் காப்பாற்ற வேண்டும் என தலைமை செயலகத்தில் மின்சார துறை அமைச்சர் வி.செந்தில் பாலா ஜியைச் சந்தித்து முறையிட்டனர். திருச்செங்கோடு தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரன் முன்னிலையில் நடைபெற்ற இச்சந் திப்பில் தமிழ்நாடு விசைத்தறி சங்கங் களின் கூட்டமைப்பின் செயலாளர் இரா.வேலுச்சாமி, ஒருங்கிணைப்பா ளர் டி.எஸ்ஏ.சுப்பிரமணியன், அமைப் புச் செயலாளர் பா.கந்தவேல்,  கோவை மண்டல பொறுப்பாளர் அப்பு குட்டி (எ) எம்.பாலசுப்பிரமணியம்,  நாமக்கல் மண்டல பொறுப்பாளர் முருகானந்தம், திருச்செங்கோடு வட் டார விசைத்தறி சங்கத் தலைவர் காயத்ரி சுப்பிரமணியம், பல்லடம் விசைத்தறி சங்க துணைச் செயலா ளர் பாலாஜி, கண்ணம்பாளையம் விசைத்தறி சங்க செயலாளர் செந் தில்குமார், மங்கலம் விசைத்தறி சங்க துணைத்தலைவர் கோபால் கலந்து கொண்டனர்.  நீண்ட நேரம் நமது கோரிக் கையை பரிவுடன் கேட்டுக் கொண்ட  மின்துறை அமைச்சர், முதல்வர் கவ னத்திற்கு எடுத்துச் சென்று நல்ல நட வடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த தாக விசைத்தறியாளர்கள் தெரி வித்தனர்.

;