districts

img

மின் கட்டண உயர்வு: சிபிஎம் ஆர்ப்பாட்டம்

சேலம், செப்.19- மின் கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சி யினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. அதேபோல் வீட்டு வரி சொத்து வரி  குடிநீர் கட்டணம் ஆகியவற்றிற்கான வரியை உயர்த்தி உள்ளது. இதனால் சாதாரண ஏழை , எளிய பொதுமக்கள் மிகவும் பாதிப்புக்கு உள் ளாகி உள்ளனர். எனவே உயர்த்தப்பட்ட மின் கட்டணம், வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் கட் டண உயர்வை திரும்பப்பெற வேண்டும் என் பதை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கண்ணங் குறிச்சி 13 வது வார்டு கவுன்சிலர் பி.தேவி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் மாவட்ட செயலாளர் மேவை. சண் முகராஜா, சேலம் தாலுகா செயலாளர் கே. எஸ்.பழனிசாமி, தாலுகா குழு உறுப்பினர் பி.முருகேசன் உள்ளிட்ட திரளானோர் பங் கேற்றனர்.

நாமக்கல்

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் நால் ரோட்டில் மார்க்சிஸ்ட் கட்சியினர் மின் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். நகர கட்சி கிளை செய லாளர் ஜி.பெருமாள் தலைமையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் ஒன்றிய செய லாளர் ஆர்.ரவி உள்ளிட்ட தலைவர்கள் உரை யாற்றினர்.

அவிநாசி

இதே கோரிக்கையை வலியுறுத்தி  அவி நாசியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியி னர் மின்வாரிய அலுவலகம் முன்பு திங்க ளன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், கட்சியின் அவிநாசி ஒன்றிய செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, சிஐடியு விசைத்தறி தொழி லாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் முத்து சாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் வெங்கடாசலம், ஒன்றிய குழு உறுப்பினர்கள் வேலுச்சாமி, சண்முகம், தேவி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சாமியப்பன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.
 

;