உடுமலை, ஜன.8- உடுமலையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற் றும் கலைஞர் சங்கத்தின் சார்பில் ஞாயிற்றுக்கிழமை குட் டைத்திடலில் சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடப்பட் டது. உடுமலையில் தமுஎகச சார்பில் சமத்துவத்தை போற்றும் வகையிலும் நம்முடைய பாரம்பரியத்தை இளம் தலை முறைக்கு தெரிவிக்கும் வகையில் பொங்கல் வைத்து கும்மி பாடல்கள் பாடி கொண்டாப்பட்டது. இதில், பள்ளி மாணவர்க ளுக்கு திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடைபெற்றது. போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் புத்தகங்கள் பரிசாக தரப்பட்டது. முன்னதாக இந்நிகழ்ச்சிக்கு தமுஎகசவின் உடுமலை கிளைத்தலைவர் சுதா சுப்பிரமணியம் தலைமை வகித்தார். மாதர் சங்க நிர்வாகி வசந்தி, சித்தரா ஆகியோர் சமத்துவ பொங்கல் வைத்தார்கள். மாவட்ட இணை செயலாளர் தோழன்ராஜா, தமிழ்நாடு அறிவியல் இயக்க தலைவர் ஆசிரி யர் செல்லத்துரை, கிளை செயலாளர் துரையரசன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் இளையபாரதி, ராசாத்தி, உடுமலை துணைத்தலைவர் விவசாயபாரதி மற்றும் கொழுமம் ஆதி உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.