districts

img

சாமளாபுரம் பேரூராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

திருப்பூர், ஜூன் 26- திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் பேரூராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.  இந்த விழிப்புணர்வு பேரணி சாமளாபுரம் பேரூராட்சி மன்ற அலுவலகத்தில் துவங்கி சாமளாபுரத்தில் நிறைவ டைந்தது. இந்த பேரணியில் பங்கேற்றவர்கள் கையில் மஞ் சப்பையுடனும், “பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்ப்போம், சுற்றுச்சூழல் சீர்கேட்டை தடுப்போம்” உள்ளிட்ட வாசகங் களை அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனர். இதில், சாமளாபுரம் பேரூராட்சி மன்றத் தலைவர் விநா யகா பழனிச்சாமி, துணைத் தலைவர் குட்டி வரதராஜன், செயல் அலுவலர் ஆனந்தகுமார் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். பின்னர், சாமளாபுரத்தில் கடைகளில் பிளாஸ்டிக் பயன் பாட்டை தவிர்ப்பது குறித்து துண்டு பிரசுரங்களுடன் மஞ்சள் பையையும் வழங்கினர். தொடர்ந்து, சாமளாபுரம் பேரூ ராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் நெகிழி (பிளாஸ்டிக்) இல்லாத பேரூராட்சியாக உருவாக்க உறுதிமொழி ஏற்றுக்  கொண்டனர்.