districts

img

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

தருமபுரி, டிச.8- தேசிய மாணவர் படை தினத்தை முன்னிட்டு தருமபுரியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது.   73 ஆவது தேசிய மாணவர் படை தினத்தை முன்னிட்டு தருமபுரி அரசு கலைக் கல்லூரி தேசிய மாணவர் படையும், ஜெயம் பொறியியல் கல் லூரி தேசிய மாணவர் படையும் இணைந்து நடத்திய பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி, தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் துவங்கியது. இப்பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி.கலைச் செல்வன் கொடியசைத்து துவக்கி  வைத்தார். இந்நிகழ்வில் தருமபுரி  அரசு கலைக் கல்லூரி முதல்வர் ப.கி. கிள்ளிவளவன், என்சிசி அலுவலர்  அ.தீர்த்தகிரி, ஜெயம் பொறியியல்  கல்லூரி என்சிசி அலுவலர் பி.முருகன், தருமபுரி அரசு கலைக் கல்லூரி உடற் கல்வி இயக்குனர் கு. பாலமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில், தருமபுரி அரசு கலைக் கல் லூரி மற்றும் ஜெயம் பொறியியல் கல் லூரியை சேர்ந்த நூற்றுக்கும் மேற் பட்ட என்சிசி மாணவ மாணவிகள் கலந்துகொண்டு பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி னர். இப்பேரணி தருமபுரி நான்குரோடு பகுதியில் நிறைவு பெற்றது.

;