districts

img

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள் 6

தார்ச்சாலை அமைத்துத்தர வலியுறுத்தி மறியல்

சேலம், ஜூன் 6- தம்மம்பட்டி அருகே தார்ச்சாலை அமைத்துத்தர வேண் டும் என வலியுறுத்தி அப்பகுதி மலைவாழ் பொதுமக்கள் மறிய லில் ஈடுபட்டனர்.

சேலம் மாவட்டம், தம்மம்பட்டி அருகே உள்ள ஜங்கம சமுத்திரம் ஊராட்சி எல்லையும், நாமக்கல் மாவட்டம் தொடங் கும் இணைப்பும் உள்ள மலையேற்றத்தில் 200 மீட்டர் தூரத் திற்கு மண்சாலையாகவே உள்ளது. குண்டும், குழியுமாக இந்த சாலை இருப்பதால் அதன் வழியாக நாமக்கல் மாவட் டம், கொல்லிமலை அறப்பளீஸ்வரர் கோவிலுக்குச் செல் வோர் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, தார்ச்சாலை அமைத்துத்தர வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மலை வாழ் மக்கள், அரசு பேருந்தை மறித்து மறியலில் ஈடுபட்ட னர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கோவில் உண்டியலை உடைத்து திருட்டு

ஈரோடு, ஜூன் 6- கோவில் உண்டியலை உடைத்து ரூ.40 ஆயிரம் பணத்தை  திருடிய நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

ஈரோடு அருகே உள்ள 46 புதூரில் முனியப்பன் கோயில்  உள்ளது. இங்கு புதனன்று இரவு வழக்கம் போல கோயில்  பூஜைகள் நடத்தப்பட்ட பின் பூசாரி கதவுகளை பூட்டிவிட்டு  சென்றார். பின்பு, மறுநாள் காலை கோயிலை திறந்த போது  கோயிலில் சாமி சிலை எதிரில் இருந்த உண்டியல் உடைக்கப் பட்டிருந்தது.

தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த ஈரோடு தாலுகா  காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், உண்டிய லில் இருந்த ரூ.40 ஆயிரம் திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது. மேலும், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறை யினர் திருட்டில் தொடர்புடைய குற்றவாளிகளை தேடி வரு கின்றனர்.

இறைச்சிக் கழிவுகளை கொட்டிய நபர் கைது 

கோவை, ஜூன் 6- ராஜவீதி கோனியம்மன் கோவில் தேர் அருகே இறைச்சிக்  கழிவுகளை கொட்டிய நபரை போலீசார் கைது செய்த னர்.

கோவை, காந்தி பார்க் பகுதியில் இருந்து இரு சக்கர வாக னத்தில் இறைச்சிக் கழிவுகளை எடுத்து வந்து, ராஜ வீதியில் தேரின் அருகில் இறைச்சி கழிவுகளை வீசி சென்று  உள்ளார். இதனை தொடர்ந்து, கோவை வெரைட்டி ஹால்  காவல் துறையினர் 153A (சாதி, மத, இன மொழி தொடர் பாக விரோத உணர்வுகளை தூண்டுதல்), 290 (தொல்லை கொடுத்தல்), 504 (அமைதியை சீர்குலைத்தல்) ஆகிய 3 பிரிவு களில் வழக்கு பதிவு செய்த போலீசார் முகமது அயாஸ் என்ப வரை கைது செய்தனர்.

திடீரென தீப்பற்றி எரிந்த கார்

சேலம், ஜூன் 6- குரங்குச்சாவடி அருகே திடீரென கார் ஒன்று தீப்பற்றி எரிந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

சேலம் மாவட்டம், குரங்குச்சாவடி, சரஸ்வதிப்பட்டி இரண் டாவது தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (57). இவர்  அப்பகுதியில் கார்களுக்கான கண்ணாடி சர்வீஸ் செய்யும் கடை வைத்துள்ளார். இந்நிலையில், வியாழனன்று காலை  அவர் காரின் கதவினை திறந்து வைத்து வழக்கம் போல் காரை  ஸ்டார்ட் செய்துள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக  காரில் தீ பிடித்தது. இதனை அடுத்து காரிலிருந்து இறங்கி வெளியேறினார். இதுகுறித்து சூரமங்கலம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம் பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் பற்றி எரிந்து கொண்டிருந்த காரின் மீது தண்ணீரை பீச்சி  அடித்து தீயை அணைத்தனர். ஆனால், கார் முற்றிலுமாக எரிந்து சேதமானது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பள்ளி முன்பு குட்காப் பொருட்கள் விற்பனை

நாமக்கல், ஜூன் 6- பள்ளிபாளையம் அருகே தனியார் பள்ளி முன்பு குட்காப் பொருட்கள் விற்பனை செய்த கடையின் உரிமம் ரத்து  செய்யப்பட்டு, சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அடுத்துள்ள ஐந்து பனை கிராமத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளி முன் புள்ள பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட பான்மசாலா விற் பனை செய்வதாக புகார் வந்தது. இதையடுத்து பள்ளி பாளையம் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் திகாரி ரங்க நாதன் தலைமையிலான குழுவினர் சோதனை செய்தனர். இதில் ராமு என்பவரின் பெட்டிக்கடையில் பான்மசாலா, குட்காப் பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த அதி காரிகள் கடைக்கு சீல் வைத்து, கடை உரிமையாளருக்கு ரூ.25  ஆயிரம் அபராதம் விதித்தனர். இதேபோன்று ஆவாரங் காடு செல்வம் பெட்டிக்கடையில் விற்பனைக்கு வைத்திருந்த  5 கிலோ குட்காப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, கடை யின் உரிமத்தை ரத்து செய்து சீல் வைக்க மாவட்ட உணவுத் துறை அதிகாரிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதே போல், குமாரபாளையம் தம்மண்ண செட்டியார் வீதியில் உள்ள சுப்புலட்சுமி மளிகை கடை, ஓலப்பாளையம் எம் ஜிஆர் நகரைச் சேர்ந்த அங்கமுத்து மளிகை கடை, பல்லக் காபாளையம் ராஜம்மாள் மளிகை கடைகளில் சோதனை செய்யப்பட்டது. இதில் தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்காப் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த கடைகளில் பொருட் களை விற்பனை செய்வதை தடை செய்யும்படி, மாவட்ட  உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அருண் உத்தர விட்டார். இந்த கடைகளின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.25  ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது

கோவை, ஜூன் 6- பொள்ளாச்சியில், கஞ்சாவை விற்பனைக்காக கொண்ட  வந்த 2 பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்த  1.50 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய  பகுதியில் வியாழனன்று கஞ்சா விற்பனைக்கு கொண்டு வரு வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, தனிப்படை காவல்துறையினர் ஜோதி நகர் பார்க்  அருகே வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, கஞ் சாவை விற்பனைக்கு கொண்டு வந்த பொள்ளாச்சி பகுதி யைச் சேர்ந்த சதாம் உசேன்(23) மற்றும் முகமத் சல்மான்(22)  ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து 1 கிலோ  50 கிராம் கஞ்சா மற்றும் 1 இருசக்கர வாகனம் ஆகிய வற்றை பறிமுதல் செய்தனர். பின்பு, அந்த நபர்களை காவல்  துறையினர் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

அரசு கலை கல்லூரி பொது கலந்தாய்வு அறிவிப்பு

கோபி, ஜூன் 6- நம்பியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான பொது கலந்தாய்வு அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பா ளையம் அடுத்த உள்ள நம்பியூர் - திட்டமலை  அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்  நடப்புக் கல்வியாண்டில் பிஏதமிழ், ஆங்கி லம், பிஎஸ்சி பொருளியல் மற்றும் வரலாறு  உள்ளிட்ட 8 பாடப்பிரிவுகள் உள்ளன. இப்பா டப்பிரிவில் மொத்தம், 450 இடங்களுக்கான மாணவர் சேர்க்கை, அரசு இட ஒதுக்கீடு விதி முறைகளின்படி நடைபெற உள்ளது. இந்நி லையில், பொதுக்கலந்தாய்வு வரும் ஜூன்  10 முதல் 12 ஆம் தேதி வரை நடைபெற உள் ளது. இக்கல்லூரியில், இளநிலைப் பாடப்பிரி வில் சேர்க்கை பெற விண்ணப்பித்த அனைத்து மாணவர்களுக்கும் தரவரிசை அடிப்படையில் கல்லூரியிலிருந்து கலந் தாய்வு நடக்கும் நாட்கள் தொடர்பான விவரங் கள் மாணாக்கர்களின் மின்னஞ்சல் செய்தி மற்றும் அலைபேசி அழைப்பு வாயிலாக தெரி விக்கப்பட்டுள்ளது.

தரவரிசைப் பட்டியல், சேர்க்கைக் கட்ட ணம் தொடர்பான விவரங்களை, கல்லூரி யின் www.thittamalaigasc.in என்ற இணைய தளத்தில் அறியலாம்.

இந்த கலந்தாய்வுக்கு வரும் போது, விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள அசல் கல்வி சான்றிதழ்கள், சாதி சான்று, அண்மை யில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவு புகைப் படம், ஆதார் அட்டை உள்ளிட்டவை எடுத்து  வர வேண்டும். இக்கல்லூரியில் புதிதாக சேர்க்கை பெற்ற அனைத்து முதலாம் ஆண்டு  மாணவர்களுக்கும், ஜுலை 3 முதல் வகுப்பு கள் துவங்கப்படும். இதற்கான அறிவிப்பை கல்லூரி முதல்வர் எஸ்.சூரியகாந்தி தெரி வித்தார்.
 

 
 

;