districts

img

மகப்பேறு நிதியுதவி நிறுத்தி வைப்பு நூதன முறையில் ஆட்சியரிடம் மனு

கோவை, டிச.13– கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்படும்  மகப்பேறு நிதியுதவி நிறுத்தி வைக்கப்பட் டுள்ளதை கண்டித்து சமூக ஆர்வலர் ஒருவர் கர்ப்பிணி வேடமணிந்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்ததால் பர பரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக கர்ப்பிணி வேட மணிந்து வந்த கோவை கிணத்துக்கடவு பகு தியை சேர்ந்த சமூக ஆர்வலர் மணி என்பவர் கூறுகையில், தமிழகத்தில் டாக்டர் முத்து லட்சுமி ரெட்டி அவர்களின் மகப்பேறு திட்டம்  மூலம் கர்ப்பிணி பெண்களுக்கு நிதியுதவி யும், ஏழை குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகமும் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இந்த மகப்பேறு நிதியுதவி வழங்கப்படாமல் இருந்து வருகிறது. இதுகுறித்து சம்பந்தப் பட்ட துறையில் விளக்கம் கேட்டால், ஒன் றிய அரசின் நிதி வரத்து இல்லாததால் நிதியு தவி வழங்க முடியவில்லை என தெரிவிக் கின்றனர். ஆகவே, ஏழை, எளிய கர்ப்பிணி பெண்களுக்கு, இந்த திட்டத்தின் பயன் சேர  வேண்டும் என்பதை தெரிவிக்க, கர்ப்பிணி வேடமணிந்து வந்ததாக தெரிவித்தார்.  எனவே, இந்தத் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தி, அனைத்து மக்களும் பயன் பெறும் வகையில் அவர்களுக்கு தேவை யான அனைத்து சலுகைகளையும் வழங்க வேண்டும் எனக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்ததாக அவர் கூறினார்.

;