districts

img

மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

ஈரோடு, பிப்.10- கார்ப்பரேட் முதலாளி களுக்கு ஆதரவான ஒன்றிய  அரசின் நிதி நிலை அறிக் கையைக் கண்டித்து மாற்றுத் திறனாளிகள் பவானி - அந்தி யூர் சாலை பிரிவில் ஆர்ப்பட் டத்தில் ஈடுபட்டனர். கிராமப்புற தேசிய ஊரக  வேலை உறுதி திட்டத்திற்கு ஒதுக்க வேண்டிய நிதியை 30 விழுக் காடு குறைத்துள்ளது. ஒருங்கிணைந்த  ஊட்டச்சத்து வழங்கும் உணவு திட்டங் களுக்கான நிதியை வெட்டியுள்ளது உள் ளிட்ட மாற்றுத்திறனாளிகளை, ஏழைகளை  புறக்கணித்து மக்களை ஏமாற்றும் ஒன்றிய அரசின் மோசடியான பட்ஜெட்டைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பவானி தாலுகா தலைவர் என்.சின்னுச்சாமி தலைமை வகித்தார். இதில், ததீஒமு மாவட்ட தலைவர் பி.பி. பழனிசாமி, சிஐடியு ஏ.ஜெகநாதன், விதொச  எஸ்.மாணிக்கம் உள்ளிட்டோர் உரையாற் றினர். இதில், திரளான மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்.