திருப்பூர் மாநகராட்சி மண்டலம் – 3, காயத்திரி திருமண மண்டபத்தில் நடைபெற்ற மக்கள் குறைகேட்பு முகாமில், செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் பொதுமக்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டனர். இதில், மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத், சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ், மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் பாடி ஆகியோர் உடனிருந்தனர்.