திருப்பூர், செப். 5 - திருப்பூர் கே.வி.ஆர்.நகர் பகுதியில் வீதி யெங்கும் கழிவுநீர் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடும் நிலையில் வீடுகளில் நாங்கள் எப்படி வசிப்பது என்று கேள்வி கேட்டு அப்பகுதி மக் கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருப்பூர் மாநகராட்சி 42ஆவது வார்டு கே. வி.ஆர்.நகர் 2ஆவது வீதியில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த வீதி தாழ் வான பகுதியாக இருக்கும் நிலையில், நகரின் மேற்குப் பகுதியில் இருந்து வரக்கூடிய கழிவு நீர் இப்பகுதி வடிகால் வழியாக செல்கிறது. மழைக் காலங்களில் மழைநீரும், கழிவுநீரும் சேர்ந்து ஆறாகப் பெருக்கெடுத்து இந்த வீதி யில் செல்கிறது. மேலும் தாழ்வான வீடுகளி லும் கழிவுநீர் புகும் நிலை உள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக இந்த நிலை நீடித்து வருவதாகவும், இது குறித்து அதிகாரி களிடம் பல முறை மனுக் கொடுத்தும் இப்பிரச் சனைக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வில்லை என்றும் மக்கள் புகார் கூறினர். இந்த நிலையில் திங்களன்று காலை இப்ப குதி பெண்கள் சுமார் 30 பேர் மாதர் சங்க தெற்கு மாநகரக்குழு உறுப்பினர் ஞா.செண்ப கவள்ளி தலைமையில் கே.வி.ஆர்.நகர் மெயின் ரோடு, கதிரவன் பள்ளி சாலை சந்திப் பில் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்ட னர். இதில் மாதர் சங்க மாவட்டத் துணைத் தலைவர் சி.பானுமதி உள்ளிட்டோர் பங்கேற் றனர். மறியல் காரணமாக இப்பகுதியில் போக் குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் திருப்பூர் மத்திய காவல் நிலைய காவல் ஆய்வாளர் உள்ளிட்ட காவலர்கள், மாநகராட்சி இளநி லைப் பொறியாளர் கார்த்திக் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு வந்தனர்.
மார்க்சிஸ்ட் கட்சியின் மாநகரச் செயலா ளர் டி.ஜெயபால், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.சுந்தரம், மாநகரக்குழு உறுப்பினர்கள் பி.பாலன், பா.ஞானசேகரன் உள்ளிட்டோர் அப்பகுதி மக்கள் சார்பில் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். சீர்மிகு நகரத் திட்டம் எனச் சொல்லி எல்லா பகுதிகளிலும் விளம்பரம் செய்கிறீர்கள். இங்கே எப்படி மக்கள் வாழ்வது, அதிகாரி கள் நேரில் வந்து இவர்கள் குடியிருக்கும் பகுதியைப் பார்க்க வேண்டும் என்று கேட்ட னர். அப்போது, மாநகராட்சி மண்டல துணை ஆணையர் செல்வநாயகம் அங்குவந்தார். கே.வி.ஆர்.நகர் 2ஆவது வீதியில் துணை ஆணையர், காவல் ஆய்வாளர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிட்டனர். இந்த இடத்தில் கழிவுநீர் வெளியேறிச் செல்ல திட்ட அறிக்கை தயாரித்திருப்பதாக தெரிவித்தனர். எனினும் தற்காலிக ஏற்பாடாக கழிவுநீர் வடிகாலை சுத்தம் செய்து, கழிவுநீர் உடனடியாக வெளியேறிச் செல்லவும், மேற் குப் பகுதியில் இருந்து வரும் கழிவுநீர் இந்த வீதிக்குள் வராமல் தெற்கு பகுதியில் உள்ள வடிகால் வழியாக ஓடையில் வெளியேறிச் செல்லும்படி செய்ய வேண்டும் என இப்ப குதி மக்கள் வலியுறுத்தினர். உடனடியாக இந்த பணிகளை மேற் கொள்வதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து சுமார் 45 நிமிடம் நீடித்த மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது.