districts

img

தண்ணீர் வசதி கேட்டு பொதுமக்கள் போராட்டம்

அவிநாசி,மே 13- அவிநாசி அருகே எம் ஜி கார்டன் பகுதியில் ஆழ்துளை  தண்ணீர் கிடைக்காததால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றியம் நடுவச்சேரி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் எம்.ஜி.கார்டன் என்ற பெயரில்  வீட்டுமனைகள் பிரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு விற்பனை  செய்யப்பட்டுள்ளது. வீட்டுமனையானது டிடிசிபி அப்ரூவ்ட்  இன்றி விற்கப்பட்டுள்ளது. இந்த வீட்டுமனை பகுதிகளில்  எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி பொதுமக்கள் குடி யேறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து தண்ணீர் வசதிக்காக, எம்.ஜி.கார்டனை சேர்ந்து உரிமையாளர், அப்பகுதியில் ஆழ்துளை கிணறு அமைத்து கொடுத்துள்ளார். ஆனால், ஆழ்துளை கிணறுக்கான மோட்டார் வசதி மற்றும் மின்  இணைப்பு வசதி ஏற்படுத்திக் கொடுக்காமல் நான்காண்டுக ளுக்கு மேலாக காலதாமதம் செய்து வந்துள்ளார். இதுகு றித்து, அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பலமுறை கேட்டும் எம்.ஜி.கார்டன் உரிமையாளர் எவ்வித நடவடிக்கை  எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், திடீரென ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு போராட்டத் தில் ஈடுபட்டனர்.  தகவலறிந்து வந்த ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் காவல்துறையினர், எம்.ஜி.கார்டன் உரிமையாளரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில், ஒரு மாத காலத்திற்குள் மின்  இணைப்பு மற்றும் மோட்டார் வசதி அமைந்து கொடுப்பதாக  பேசி முடிக்கப்பட்டது. இதையடுத்து, பொதுமக்கள் அனை வரும் கலைந்து சென்றனர். இந்நிலையில், பொதுமக்கள் போராட்டத்தின் எதிரொலியாக மின் இணைப்பிற்கு எம்.ஜி. கார்டன் உரிமையாளர் பணம் செலுத்தியதாக கூறப்ப டுகிறது.