அவிநாசி, அக்.1 – திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றி யம், கணியம்பூண்டி ஊராட்சி அருகே வஞ்சிபாளையம் முதல் திருப்பூர் செல் லும் சாலையில் தெற்குத் தோட்டம் அரு கில் குடியிருப்புக்குச் செல்லும் பாதையை மறைத்து பாலம் கட்டுவதை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப் பாட்டம் நடத்தியது. வஞ்சிபாளையம் பேருந்து நிறுத்தம் அருகே சனிக்கிழமை காலை நடை பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஊராட்சி உறுப்பினர் முருகம்பாளை யம் கே.பாலசுப்பிரமணியம் தலைமை ஏற்றார். தெற்குத் தோட்டம் அருகில் உள்ள ரயில்வே பாலத்தை மறைத்தும், பாலத்தின் தென்புறம் உள்ள குடியி ருப்புகளுக்கு செல்லும் மக்களுக்கு பாதை இல்லாமலும், மழைக்காலங்க ளில் மழைநீர் வெளியேறிச் செல்ல வழி இல்லாமலும் மறைத்துக் கட்டப்படும் புதிய பாலத்தை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி முழுக்கங்கள் எழுப்பப்பட் டன. புதுப்பாளையம் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் குமரவேல், தேவிகா முன்னிலையில், கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய கவுன்சிலர் பி.முத்துசாமி, புதுப்பாளையம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கே.முருகன், மார்க் சிஸ்ட் கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பி னர் மோகனசுந்தரம் உள்ளிட்டோர் பேசி னர். மேலும் கிளைச் செயலாளர்கள் ஜோதிபாசு, ராஜா, செல்வராஜ், ராமகி ருஷ்ணன், சதீஷ் உட்பட முக்கிய நிர்வா கிகள் பலர் கலந்து கொண்டனர்.