districts

தூய்மை பணியாளருக்கு சம்பள பாக்கியை வழங்கிடுக

சேலம், ஜூலை 11- ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் நகராட்சியில் பணியாற்றி வரும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் 71 பேருக்கு இரண்டு மாத சம்பளம் வழங்காததை கண்டித்து, நகராட்சி அலுவல கத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் நகராட்சியில், தூய்மை பணியை ஹெல்த் கேர் டெக்னாலஜி என்ற தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நகராட்சியில் 71 ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் உள்ளனர். இந்த தூய்மை பணியாளர்களுக்கு இரண்டு மாதம் சம்பளம் வழங்கப்படவில்லை.  இதனால் ஆவேசமடைந்த தூய்மை பணியாளர்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.  இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களிடம் பேச்சுவார்தை  நடத்தப்படாமல், துப்பரவு ஆய்வாளர், தூய்மைப் பணியாளர்களை தொலைபேசியில் மிரட்டியுள்ளார்.  எனவே, நரசிங்கபுரம் நகராட்சி  துப்புரவு ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் ஒப்பந்த நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி, இரண்டு மாத சம்பளத்தை உடனடியாக வழங்க தமிழ்நாடு அரசும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.