districts

img

நிலுவைச் சம்பளம் வழங்குக - விதொச ஆர்ப்பாட்டம்

கோவை, மார்ச் 10- ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியா ளர்களுக்கு சம்பள பாக்கி தொகையை உடனே வழங்க வலியுறுத்தி, விவசாய தொழி லாளர்கள் சங்கம் சார்பில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் கடந்த 6 மாதங்க ளாக, மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்ட பணியாளர்களுக்கு சம்பளம்  நிலுவையில் உள்ளது. இந்த நடவடிக் கையை கண்டித்து விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் பல்வேறு இடங்களில் கண் டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகி றது. இதன் ஒரு பகுதியாக ஞாயிறன்று,  கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பா ளையம் அடுத்த அசோகபுரம் காந்தி கால னியில் விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.  முன்னதாக, ஆர்ப்பாட்டத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் செல்வராஜ், முன்னாள் மாவட் டத் தலைவர் கேசவ மணி, முன்னாள் மாவட்ட  குழு உறுப்பினர்கள் லெனின் குமார், வெங்கடேஷ் உள்ளிட்ட திரளான விவசாய தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். அப்போது, ஊரக வேலைவாய்ப்பு திட்டப் பணியாளர்களுக்கு கடந்த 6 மாதங்களாக  நிலுவையில் உள்ள சம்பளத் தொகையினை உடனடியாக வழங்க வேண்டும். விண்ணப் பித்த அனைவருக்கும் 100 நாள் பணியை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்பன உள் ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி முழக் கங்களை எழுப்பினர்.