districts

img

குறைந்தபட்ச ஊதியம் ரூ.28 ஆயிரம் வழங்கிடுக

கோவை, ஜூலை 2 குறைந்தபட்ச ஊதியமாக ரூ.28 ஆயிரம் நிர்ணயம் செய்ய   வலியுறுத்தி  கோயம்புத்தூர் டிஸ்ட் ரிக்ட் ஜெனரல் இன்ஜினியரிங்  மற்றும் மெக்கானிக்கல் ஒர்க்கர்ஸ்  சங்கத்தின் 67 ஆவது மகாசபை யில் தீர்மானம் நிறைவேற்றப்பட் டுள்ளது.    கோயம்புத்தூர் இன்ஜினி யரிங் சங்கத்தின்  67ஆவது மகா சபை (கே.சிவசாமி நினைவு அரங்கம்) கணபதி இன்ஜினியரிங் சங்க கூட்டரங்கில் ஞாயிறன்று நடைபெற்றது. சிஐடியு கொடியை இன்ஜினி யரிங் சங்க மாவட்ட துணைத் தலைவர் பி.ராஜேந்திரன் ஏற்றி வைத்தார். இதையடுத்து, மகா சபைக்கு இன்ஜினியரிங் சங்க  மாவட்ட தலைவர் எஸ்.பி.சுப்பிர மணியம் தலைமை ஏற்றார். மாவட்ட துணைச் செயலாளர் கே.ஏ. பழனிச்சாமி அஞ்சலி தீர்மா னத்தை வசித்தார். துணைத் தலை வர் ஏ.சிவகுமார் வரவேற்றார். இன்ஜினியரிங் அரங்க செய லாளர் வி.பெருமாள் வாழ்த்துரை வழங்கினார். சிஐடியு கோவை மாவட்ட  துணைத்தலைவர் ஆர்.கேசவமணி துவக்க உரையாற்றினார். வேலை யறிக்கையை மாவட்ட பொதுச் செயலாளர் சி.துரைசாமி, வரவு-செலவு அறிக்கையை மாவட்ட பொருளாளர் ஏ.ஜி.சுப்பிர மணியம் ஆகியோர் சமர்ப்பித் தனர். மகாசபை கூட்டத்தில், தடாகம்  சாலையை ஜி.சி.டி. முதல் கணு வாய் வரை நான்கு வழிச்சாலை யாக விரிவாக்கம் செய்ய வேண்டும். இ.எஸ்.ஐ. பலன்களை  பெற அனைத்து வகை தொழிலா ளர்களின் ஊதிய உச்சவரம்பை நீக்க வேண்டும். ஒன்றிய அரசின் 20 சதவிகித மின் கட்டண உயர்வை  திரும்பப் பெற வேண்டும். குறைந்த பட்ச ஊதியமாக ரூ.28 ஆயிரம்  வழங்க வேண்டும் உள்ளிட்ட  தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.  இன்ஜினியரிங் சங்கத்தின் கௌரவ தலைவராக யு.கே. வெள்ளிங்கிரி, மாவட்ட தலைவ ராக எஸ்.பி.சுப்பிரமணியம், பொதுச்செயலாளராக சி.துரை சாமி, பொருளாளராக ஏ.ஜி.சுப்பிர மணியம், 4 இணைச்செயலாளர் களும்,  3 உப தலைவர்கள்  உள்ளிட்ட 21 பேர் கொண்ட நிர் வாகக் குழு தேர்வு செய்யப்பட் டது.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் முன்னாள் சட்டமன்ற உறுப் பினர் யு.கே.வெள்ளிங்கிரி நிறைவு ரையாற்றினார். முன்னதாக, மகா சபை கூட்டத்தில் 10 தீக்கதிர் சந்தாக் கள் ஒப்படைக்கப்பட்டது.

;