தருமபுரி, அக்.26- குடிநீர் குழாய் அமைக்க தோண்டப் பட்ட சாலையை செப்பனிடுமாறு பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பேரூராட்சியில் சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வரு கின்றனர். பேரூராட்சி பகுதியில் சுமார் 3 ஆயிரம் குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதிக்கு ஒகேனக்கல் குடிநீர் மற் றும் பஞ்சப்பள்ளி குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு களில் வழங்கப்படும் குடிநீரை சமமான அளவில் பகிர்ந்து அளிக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து வலியு றுத்தி வந்தனர். இக்கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் சுமார் 2 ஆயி ரத்து 600 வீடுகளுக்கு புதிதாக குடிநீர் குழாய்கள் அமைத்து மீட்டர் பொருத்தி சீராக குடிநீர் வழங்குவதற்கான திட்ட பணிக்கு ரூ.5 கோடியே 75 லட்சம் மதிப் பீட்டில் கடந்த 2020 ஆம் ஆண்டு பணி தொடங்கப்பட்டது.
புதிய குடிநீர் குழாய் களை அமைக்க பாலக்கோடு பகுதியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் குழி கள் தோண்டப்பட்டன. இதில் குழாய் கள் பதிக்கும் பணி 80 சதவிகித அள வில் நிறைவடைந்துள்ளது. இன்னும் 20 சதவிகிதம் பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. இந்நிலையில் குடிநீர் குழாய் பதிக் கும் பணிக்காக முக்கிய சாலைகள் மற்றும் வீதிகளில் தோண்டப்பட்ட குழி கள் மூடப்பட்டது. ஆனால் முறையாக சாலை சீரமைக்கப்படுவதில் கால தாம தம் ஏற்பட்டு வருகிறது. இதனால் சாலை கள் சமதளமின்றி காணப்படுகின்றன. மேலும், மழைக்காலங்களில் சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால் சாலைகளில் நடந்து செல்வோர் மற் றும் வாகனங்களில் செல்வோர் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள். 2 ஆண்டுகளுக்கும் மேலாக ஆமை வேகத்தில் நடைபெறும் புதிய குடிநீர் குழாய் பதிக்கும் பணியை விரைவாக முடிக்க வேண்டும். சேதமடைந்த சாலை களை செப்பனிட வேண்டும் என பாலக் கோடு பேரூராட்சி நகர மக்கள் மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளனர்.