districts

img

மின்சாரம் பாயும் கட்டிடத்தால் குழந்தைகளுக்கு ஆபத்து: நிரந்தர தீர்வு காண பெற்றோர் கோரிக்கை

திருப்பூர், நவ. 20 - திருப்பூர் ஒன்றியம் கருக்கங்காட்டுபுதூர் பகுதியில் இயங்கும் அங்கன்வாடி மையத் திற்குள் மழைக்காலங்களில் மழைநீர் ஒழுகு வதால் சுவர்களில் மின்சாரம் பாய்வதாகவும்,  குழந்தைகளுக்கு அடிக்கடி காய்ச்சல் வருவ தாகவும் பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்ற னர். திருப்பூர் ஒன்றியம், ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சிக்குட்பட்டது கருக்கங்காட்டுப்புதூர்.  இப்பகுதியில் கடந்த 2009ஆம் ஆண்டு ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் குழந்தைகள் நல மையம்  கட்டப்பட்டது. இந்நிலையில், இந்த அங்கன் வாடி மையத்தில் மழைக்காலங்களில் மழை நீர் உள்ளே ஒழுகுவதால் குழந்தைகளுக்கு அடிக்கடி காய்ச்சல் வருகிறது. மேலும் சுவர்க ளில் மின்சாரம் பாய்கிறது. இதனால் குழந்தை களை இங்கு அனுப்புவதற்குப் பயமாக உள் ளது என பெற்றோர்கள் தெரிவித்தனர்.  கிராமப்புற குழந்தைகளின் வளர்ச்சியில்  அங்கன்வாடி மையம் முக்கிய பங்காற்றுகி றது. இப்பகுதிகளில் உள்ள பெண்கள் கர்ப் பம் அடைந்தது முதல் குழந்தை பெறுவது வரை தொடர்ந்து அவர்களின் உடல் எடை, இரத்த அழுத்தம், ஊட்டச்சத்து குறித்துக் கண்காணிக்க மாதந்தோறும் மருத்துவப் பணியாளர்கள் வரும் இடமாகவும், அங்கன் வாடி மையம் உள்ளது. அவர்களுக்கு தேவை யான சத்துமாவு, சத்து மாத்திரைகள் உள்ளிட் டவைகளும் இங்குதான் வழங்கப்படுகிறது. குழந்தை பிறந்து 5 வயது அடையும் வரை மாதந்தோறும் குழந்தையின் உயரம், எடை உள்ளிட்டவை கணக்கிட்டு குழந்தைகள் ஊட்டச்சத்துடன் உள்ளனரா? ஏதேனும் தேவையா போன்ற அனைத்தையும் அங் கன்வாடி மையங்கள்தான் செய்கிறது. குழந் தைகள் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக் கும் அங்கன்வாடி மையத்தாலேயே குழந்தை களுக்கு ஆபத்து வரலாமா?

எனவே அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப்  பெற்றோர்கள் கூறினர். இதுகுறித்து அங்கன்வாடி மையத்தின் ஆசிரியர் பாலாமணி கூறுகையில், 13 ஆண்டு களாகச் செயல்படும் இந்த அங்கன்வாடி மையத்திற்கு 20 குழந்தைகள் வருகிறார் கள். மழைக் காலங்களில் ஒழுகும் நிலையில்  உள்ள அங்கன்வாடி கட்டிடத்திற்குள் குழந் தைகளை எப்படி அனுப்ப முடியும் என்று  பெற்றோர்கள் கேள்வி எழுப்பி, குழந்தை களை அனுப்புவதை நிறுத்திவிட்டனர்.  இதுகுறித்து பஞ்சாயத்து நிர்வாகத்திடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. கிராமசபைக் கூட்டத்திலும் தெரி விக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஒருங் கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் துறைக்குத் தகவல் தெரிவித்தோம். இதைத் தொடர்ந்து மேற்பார்வையாளர் துளசிமணி இந்த அங்கன்வாடி மையத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டு, இன்னும் இரண்டு மாதத்திற்குள் நிதி ஒதுக்கி புதிய அங்கன் வாடி மையம் கட்ட ஏற்பாடு செய்யப்படும் என  உறுதியளித்துள்ளார். அதுவரை அருகில் உள்ள சமுதாய நலக் கூடத்தில் அங்கன்வாடி  மையத்தை நடத்தும்படி கூறியுள்ளார். பஞ்சா யத்தும் ஒப்புதல் அளித்துவிட்டது. இப்போ தைக்கு திருமணம் போன்ற நிகழ்ச்சிகள் இங்கு நடத்தப்படாது எனவும் தெரிவித்துள் ளனர். இந்த சமுதாய நலக்கூடத்தில் அங்கன் வாடி மையம் செயல்படுவதால் பெற்றோர்க ளும் தினசரி குழந்தைகளை அனுப்புகின்ற னர். இது தற்காலிக நடவடிக்கை மட்டுமே. விரைவில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட் டப்படுவது மட்டுமே நிரந்தர தீர்வு எனத் தெரி வித்தார்.