districts

img

குடிநீர் பிரச்சனை - ஊராட்சி மன்றம் முற்றுகை

ஈரோடு, மே 20- எலவமலை ஊராட்சியில் நிலவும் குடிநீர் பிரச்சனையைத் தீர்க்க வலியு றுத்தி அப்பகுதியினர் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர். ஈரோடு ஒன்றியத்திற்குட்பட்ட எலவ மலை ஊராட்சி கிராமத்தில் இருக்கும் குடியிருப்புகளுக்கு ஆழ்துளை கிணறு  மூலம் தண்ணீர் எடுத்து மேல் நிலைத்  தொட்டி அமைத்து குடிநீர் விநியோகம்  செய்யப்படுகிறது. செங்களாப்பாறை,  குள்ளாம்பாறை, விருமாண்டம்பாளை யம், பட்டக்காரர் ரங்கநாயக்கன்பா ளையம், வீரசிவாஜி நகர் ஆகிய பகுதி களில் இரண்டு மேல்நிலைத்தொட் டிகள் மூலம் விநியோகிக்கப்படுகிறது. இக்குடியிருப்புகளுக்கு கடந்த 3 மாதங் களாக முறையாக தண்ணீர் விநியோ கம் செய்யப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் டிராக்டர் மூலம் கொண்டு வரும் தண்ணீரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தி வந்த னர்.  இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக  முற்றிலும் தண்ணீர் விநியோகம் தடை பட்ட பாதிக்கப்பட்ட பொதுமக்கள் திங்க ளன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தாலுகா குழு உறுப்பினர் முருகன்  தலைமையில் ஊராட்சி மன்ற அலுவல கத்தை முற்றுகையிட்டனர். இதனைய டுத்து அங்கு வந்த ஊராட்சி மன்ற தலை வர் வைத்தியநாதன் (பாமக) தண்ணீர்  கேட்ட மக்களிடம் நீங்கள் தண்ணீர் வரி  கட்டவில்லை. வீட்டு வரி செலுத்துவதில் லேயே எனக் கேட்டார். இதனால் பொது மக்கள் ஆவேசமடைந்து வாக்கு வாதத் தில் ஈடுபட்டனர். இதனையடுத்து வாக னங்கள் மூலம் தண்ணீர் கொடுக்க தற்கா லிகமாக நடவடிக்கை எடுக்கிறோம். பிரச்சனைக்கு விரைவில் நிரந்தர தீர்வு  காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று  சமாதானம் செய்தனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கலைந்து சென்றனர். இதுகுறித்து, சிபிஎம் தாலுகா குழு  உறுப்பினர் முருகன் கூறுகையில், நீண்ட நாட்களுக்கு முன் அமைக்கப் பட்ட மேல்நிலை தொட்டிகளே பயன் பாட்டில் உள்ளன. எனவே, மக்கள்  தொகைக்கேற்ப மேல்நிலைத்தொட்டி களை கூடுதலாக அமைத்து தண்ணீர் விநியோகத்தை முறைப்படுத்த வேண் டும் என்றார்.

;