districts

img

சாலை பணியாளர் சங்கத்தின் அமைப்பு தினம்: ஆதரவற்றோருக்கு உணவளித்து சேவை

உடுமலை, செப். 17 – தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர் சங்கத்தின் 23ஆவது அமைப்பு தினத்தை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சங்கக்  கொடியேற்று விழா நடத்தியதுடன், ஆதரவற் றோருக்கு உணவளித்து பணியாளர்கள் சேவை செய்தனர். திருப்பூர் காலேஜ் ரோட்டில் உள்ள கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு கொடியேற்று விழா கோட்டத் தலைவர் எஸ்.அண்ணாதுரை  விழாவுக்குத் தலைமை ஏற் றார். கோட்ட இணைச் செயலாளர் பி.விஸ்வ நாதன் முன்னிலையில், கோட்ட துணைத் தலைவர் என்.சிவக்குமார் சங்கக் கொடி யேற்றி வைத்தார். அரசு ஊழியர் சங்க கொடியை திருப்பூர் வடக்கு வட்ட கிளை  பொறுப்பாளர் ராபர்ட் ஏற்றி வைத்தார். அகில  இந்திய அரசு ஊழியர் சம்மேளனத்தின் கொடியை அரசு ஊழியர் சங்க மாவட்ட இணை செயலாளர் ராமன் ஏற்றி வைத்தார்.  கோட்ட பொருளாளர் ஆர்.கருப்பன் நன்றி கூறினார். அதைதொடர்ந்து பகல் 1:30 மணிக்கு திரு முருகன் பூண்டியில் ஆதரவற்ற 25 குழந்தை களுக்கு கோட்டப் பணியாளர் சங்கத்தினர் நேரடியாக மதிய உணவு வழங்கினர்.

உடுமலைபேட்டை 

உடுமலை உட்கோட்டத்தில் முதல் நிகழ் வாக காந்தி ஆசிரமம் ஆதரவற்ற பள்ளி குழந் தைகளுக்கு உதவி பொருட்கள், ஒரு டவல், எழுதுகோல், வரைபட உபகரணங்கள், இனிப்பு மற்றும் காரம் வழங்கப்பட்டது. மேலும் அலுவலக வளாகத்தில் கொடி ஏற்று விழா நடைபெற்றது. இந்த விழாவுக்கு உட்கோட்ட தலைவர் கே.செல்லமுத்து தலைமை தாங்கினார். அரசு ஊழியர் சங்க  கொடியை உடுமலை வட்டக் கிளைத் தலை வர்  விவேகானந்தன் ஏற்றி வைத்தார். அகில  இந்திய மாநில அரசு ஊழியர் சங்கக் கொடியை அனைத்து துறை ஓய்வூதியர் சங் கத்தின் வட்டக் கிளைச் செயலாளர் விஜயகு மார் ஏற்றி வைத்தார். அனைத்து துறை ஓய்வூர் சங்கத்தின் வட்டக் கிளைத் தலைவர் டி.தாசன், எஸ்.பால கிருஷ்ணன், நெடுஞ்சாலைத் துறை ஊழியர்  சங்கத்தின் பொறுப்பாளர் பஞ்சாட்சரம், கல் வித்துறை அலுவலர் சங்கத்தின் அன்வர், செல்வக்குமார் ஆகியோர் வாழ்த்திப் பேசி னர். பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் மாநில  பொறுப்பாளர் என்.சக்திவேல் சிறப்புரை ஆற் றினார். நெடுஞ்சாலை துறை சாலை பணியா ளர் சங்கத்தின் கோட்டப் பொருளாளர் எஸ். முருகசாமி நிறைவுறை ஆற்றினார்.

காங்கேயம்

காங்கேயம் உட்கோட்டத்தில் 23 ஆவது  ஆண்டு அமைப்பு தினம் கொடியேற்று விழா  நடைபெற்றது. உட்கோட்ட தலைவர் கணே சன் தலைமை ஏற்று சங்கக் கொடியை ஏற்றி  வைத்தார். அரசு ஊழியர் சங்க கொடியை வட்ட கிளை இணைச் செயலாளர் முத்து சாமி ஏற்றினர். அகில இந்திய அரசு ஊழியர் சங்க கொடியை செல்வராஜ் ஏற்றினர். இந்த  விழாவில் 20க்கும் மேற்பட்டோர் பங்கேற் றனர். மக்கள் சேவை பணியில் மதியம் ஒரு  மணிக்கு காங்கேயம் மத்திய பேருந்து நிலை யத்தில் முதியோர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
 

 

;