districts

img

பொதுமக்களின் தாகத்தை போக்க சிபிஎம் சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு

கோவை, மே 13- கோடை வெயிலில் இருந்து பொதுமக்களின் தாகத்தை போக்க, காந்திபுரம் 100 அடி  சாலையில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கோவை மாவட் டக் குழு சார்பில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் திறந்து வைத்தார். தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பகல் நேரங்களில் வெப்ப அலை வீசி வருகிறது. இந்த நிலையில் கடும் வெப்பத்தால் அவதிக்குள்ளாகும் பொதுமக்களின் தாகத்தை தணிக் கும் வகையில் கோவை காந்திபு ரம் 100 அடி சாலையில், மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக்குழு சார்பில் நீர் மோர்  பந்தல் திங்களன்று திறக்கப்பட் டது.  நீர்மோர் பந்தலை கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர் நடராஜன் திறந்து வைத்து பொது மக்களுக்கு நீர்மோர் வழங்கி விநி யோகத்தை துவக்கி வைத்தார். அப்போது கோடை வெயிலின் தாக் கத்தால் உடலில் நீர் வற்றி போதலை தடுக்க அடிக்கடி தண் ணீர், இளநீர், நீர்மோர் உள்ளிட்ட வைகளை பருகிட வேண்டுமென  பொதுமக்களுக்கு அறிவுரை வழங் கினார். இந்த நிகழ்வில் மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச்  செயலாளர் சி.பத்மநாபன் மற்றும்  மாவட்ட செயற்குழு உறுப்பினர் கள், மாவட்டக்குழு உறுப்பினர் கள் என பலர் உடன் இருந்தனர். சேலம் சேலம் மாநகர மக்களின் கோடை தாகத்தை போக்கும்  வகையில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் பெரமனூர், லீ.பஜார், சாமிநாதபுரம், சின்னேரி வயல்காடு, மெய்யனூர் உள்ளிட்ட  பகுதிகளில் இலவச நீர், மோர் பந்தல் திறக்கப்பட்டுள்ளது. இதற் கான ஏற்பாடுகளை கட்சியின் வடக்கு மாநகரக்குழுவினர் செய்து  வருகின்றனர்.

;