districts

img

கட்டிட அனுமதிக்கான வரைபடத்தில் கையெழுத்திடும் பொறியாளர்களை ஒரே இடத்தில் பதிவு செய்திட கோரிக்கை

திருப்பூர், செப்.23– கட்டிட அனுமதிக்கான வரைபடத் தில் கையெழுத்திடும் பொறியாளர்கள் உள்ளூர் திட்டக் குழுமம் முதல் அந் தந்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி,  ஊராட்சிகளிலும் தனித்தனியாகப் பதிவு செய்ய வேண்டும் என்பதை மாற்றி  ஒரே இடத்தில் பதிவு செய்து கொள்ள ஏற் பாடு செய்ய வேண்டும் என்று திருப்பூர்  சிவில் இன்ஜினியர்கள் சங்கம் கேட்டுக்  கொண்டுள்ளது. திருப்பூர் சிவில் இன்ஜினியர்ஸ் சங்கத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் வியாழக்கிழமை தாராபுரம் ரோடு தனியார் திருமண மண்டபத்தில் சங்கத் தலைவர் எஸ்.ஸ்டாலின்பாரதி தலைமையில் நடைபெற்றது. செயலா ளர் கே.ராதாகிருஷ்ணன் ஆண்ட றிக்கை சமர்ப்பித்தார். பொருளாளர் என்.பாரதிராஜா வரவு செலவு அறிக்கை  சமர்ப்பித்தார்.  கட்டிட கட்டுமான பொருட்களின் கண்காட்சி வருகிற டிசம்பர் 30, 31, ஜன வரி 1,2 ஆகிய நான்கு நாட்கள் வித்யா  கார்த்திக் மண்டபத்தில் நடைபெற உள் ளது. அதற்கான கண்காட்சி சிற்றேட்டை  சங்கத் தலைவர் எஸ்.ஸ்டாலின்பாரதி வெளியிட, கண்காட்சித் தலைவர் எம். துரைசாமி பெற்றுக் கொண்டார்.  

பொதுக்குழு குழு கூட்டத்தில், திருப் பூர் நகர்ப்புற வளர்ச்சி குழுமம் அமைத் தற்கும், அந்த குழுமத்தில் உறுப்பின ராக சங்கத்தின் முன்னாள் தலைவர் கே. சண்முகராஜை நியமித்ததற்கும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. அனுமதி பெற்று கட்டப்படும் கட்டிடங் களில் விதிமீறல்கள் இருந்தால் அதற்கு  பதிவுபெற்ற பொறியாளர்கள் பொறுப்பு என்பதை நீக்க வேண்டும். கட் டிட அனுமதிக்கான வரைபடத்தில் கையெழுத்திட உள்ளூர் திட்ட குழு மம், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி,  ஊராட்சி என்று ஒவ்வொரு இடத்திலும்  பொறியாளர்கள் பதிவு செய்ய வேண் டும் என்பதை மாற்றி ஒரே இடத்தில் பதிவு செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் உடனடி முன்னாள் தலை வர் பி.கே.முரளி, துணைத் தலைவர் சி. பழனிச்சாமி, துணைச் செயலாளர் ஆர். பிரகாஷ் உள்பட உறுப்பினர்கள் கலந்து  கொண்டனர்.

;