திருப்பூர், ஜூலை 11- நான்கு துறைகளுக்கு ஒரே மத் திய அமைச்சர் பியூஸ்கோயல் செயல்படுகிறார். அவரால் எப்படி ஜவுளித்துறையை கவனிக்க முடி யும் என்று திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கம் (டீமா) தலைவர் எம்.பி.முத்துரத்தி னம் கூறினார். டீமா சங்கத் தலைவர் முத்துரத் தினம் இது குறித்து தீக்கதிர் செய்தி யாளரிடம் கூறியதாவது: பின்ன லாடை தொழில் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. பணமதிப்பு நீக் கம், ஜிஎஸ்டி,கொரோனா பேரிடர், நூல் விலை ஏற்றம், இப்பொழுது உக்ரைன் போர் ஆகிய அடுத்தடுத்த காரணங்களால் இந்த தொழில் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகி றது. மத்திய, மாநில அரசுகள் உடன டியாக தலையிட்டு பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். திருப்பூரிலிருந்து மட்டும் ரூ.40 ஆயிரம் கோடிக்கு ஏற்றுமதி நடை பெறுகிறது. ரூ.30 ஆயிரம் கோடிக்கு உள்நாட்டு வர்த்தகம் நடைபெ றுகிறது.
விவசாயத்திற்கு அடுத்த படி யாக ஜவுளிதொழில்தான் வேலை வாய்ப்பு வழங்கி வருகிறது. இதற்கு என்று தனியாக ஒரு வாரியம் இல்லை. மத்திய ஜவுளிதுறை அமைச்சர் பியூஷ் கோயல் நான்கு துறைகளுக்கு அமைச்சராக இருக்கி றார். எப்படி ஜவுளிதுறையில் அவ ரால் கவணம் செலுத்த முடியும். பல லட்சம் தொழிலாளர்களின் குடும்பங் கள் இந்த தொழிலை நம்பி உள் ளார்கள். இப்பொழுது 60 சதவீதம் வேலையின்மையை சந்தித்து வரு கிறது. திருப்பூரில் சிறுகுறு நிறுவ னங்களை சார்ந்து 90 சதவீதம் தொழில்கள் உள்ளன. உற்பத்தி குறைந்து வருவதால் இதை சார்ந்து உள்ள ஸ்பின்னிங் மில்கள் 55 சதவீதம் வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே செயல்படுகின்றன.பின்னலாடை தொழிலை சார்ந்து தான் டீக்கடை முதல் அனைத்துத் தொழில்களும் உள்ளன. பனியன் நிறுவனங்கள் செயல்பட்டால் தான் மற்ற தொழில் களுக்கும் அதை சார்ந்து உள்ள தொழிலாளர்களுக்கும் வருமானம் கிடைக்கும்.
உலக அளவில் பருத்தி உற்பத் தியில் இந்தியா தான் முதலிடம். ஸ்கில்டு லேபர்ஸ் எனப்படும் திறன் வாய்ந்த தொழிலாளர்கள் அதிக மாக இந்தியாவில் தான் உள்ளனர். ஆனால் உலக பின்னலாடை ஏற்றும தியில் மூன்று சதவீதம் தான் இந்தியா பங்கு. அண்டை நாடான பங்கள தேஷ், சீனா, வியட்நாம் நம்மை விட அதிக ஏற்றுமதி செய்து நமக்கு முன்னால் உள்ளனர். இந்த சூழலை மாற்ற இங்குள்ள தொழில் குறித்து தெரிந்த மேற்கு மாவட்டங்களைச் சேர்ந்த நபரை தமி ழக அரசு அமைச்சராக நியமிக்க வேண்டும். மத்திய அரசு தனி அமைச் சரை நியமிக்க வேண்டும். பஞ்சு நூல் பதுக்கலை தடுக்க காட்டன் கார்ப்ப ரேஷன் ஆஃப் இந்தியா மூலம் நேரடி யாக கொள்முதல் செய்து நூற்பா லைகளுக்கு இடைத்தரகர்கள் இல் லாமல் விநியோகிக்க வேண்டும். இதன் மூலம் மட்டுமே பருத்திப் பதுக் கலை தடுக்கவும், கள்ளச் சந்தையை ஒழிக்கவும் முடியும். கடந்த ஆண்டு மத்திய அமைச் சர் பியூஸ் கோயல் திருப்பூர் வந்திருந் தார். அவருக்கு திருப்பூரின் உண்மை யான சூழல் குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படாததால். அவர் 90% திருப்பூர் வளர்ச்சியை நோக்கி செல் கிறது என்ற தவறான தகவலை தெரிவித்தார். உடனடியாக பின்னலாடை தொழிலுக்கென்று தனி வாரியம் அமைப்பதன் மூலம் மட்டுமே தொழில் நிலைமைகளை குறித்து மத்திய, மாநில அரசுகளுக்கு உண் மையான தகவல்கள் சென்றடையும். இத்தொழிலை நம்பி உள்ள தொழி லாளர்களின் வாழ்வாதாரத்தையும் காக்க முடியும். மத்திய அரசு இத்து றைக்கு தனி அமைச்சரை நியமிக்க வேண்டும். திருப்பூரின் தொழில் களை காப்பாற்ற இது தான் ஒரே வழி என்றார்.