கோவை, டிச.17– கோவை சரவணம்பட்டி பகுதியில் சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என கோவை மாநகர காவல் துணை ஆணையர் தெரி வித்துள்ளார். இதுகுறித்து கோவை மாநகர காவல் துணை ஆணையர் உமா செய்தியாளர்களி டம் கூறுகையில், சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்த 16 வயது பள்ளி மாணவி சாக்கு மூட்டையில் சடலமாக மீட்கப்பட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்யப்பட்ட நிலையில், அதேபகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் (44) என்பவர் சிறு மியை கொலை செய்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து அவரிடம் நடை பெற்ற விசாரணையில், இறந்த சிறுமியின் தாய்க்கும், முத்துக்குமாருக்கும் நகை கொடுக்கல், வாங்கல் சம்பந்தமாக பிரச் சனை இருந்து வந்துள்ளது. அதிலிருந்து தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக சிறுமி நகையுடன் வேறு ஒருவருடன் ஓட்டம் பிடித்து விட்டார் என்று நம்ப வைப்பதற்காக அவரை கடத்தி சென்று கொலை செய்தது தெரியவந்தது. மேலும், முத்துக்குமாரிடம் இருந்து 4 1/4 பவுன் தங்க நகை மீட்கப்பட்டு, அவர் மீது கொலை, ஆதாயக் கொலை வழக்கு செய் யப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து புலன் விசாரணை நடைபெற்று வருகிறது. பிரே தப் பரிசோதனை முடிவில், சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா? என்பது உள்ளிட்ட விவரங்கள் தெரியவரும், என் றார்.