districts

சுற்றுச்சூழல் சான்றிதழ் கிடைத்தவுடன் சிப்காட் பணிகள் துவங்கும்

அமைச்சர் தகவல் தருமபுரி, ஜூன் 16- ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் தடையில்லா சான்றிதழ் கிடைத்த வுடன் தருமபுரியில் சிப்காட் அமைக் கும் பணிகள் துவங்கப்படும் என  அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். தருமபுரியில் புதிய ஆட்சியர் அலுவலக கட்டுமானப் பணிகள், பாரதிபுரம் - வெண்ணாம்பட்டி சாலையை இணைக்கும் வகை யில் புதிதாக ரயில்வே மேம்பாலம் அமைய உள்ள இடம், சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் மேம் பாட்டுப் பணிகள் ஆகியவற்றை வேளாண், உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதன்பின் அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசுகையில், வெண்ணாம்பட்டி யில் ரயில்வே கடவுப்பாதை அடைக் கும் போது, தருமபுரி நகரிலிருந்து வெண்ணாம்பட்டி, ஆயுதப்படை மைதானம், குள்ளனூர், தோக்கம் பட்டி, வெண்ணாம்பட்டி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, காவலர் குடியிருப்பு, தருமபுரி – சேலம் தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லும் வாகனங்கள் நீண்ட நேரம் காத்தி ருக்க வேண்டிய நிலை ஏற்படுகி றது. இதனால், அச்சாலையில் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனைத் தவிர்க்க, ரயில்வே மேம்பாலம் அமைக்க  வேண்டும் என்பது இப்பகுதி மக்க ளின் நீண்டகால கோக்கையாகும். மக்களின் கோரிக்கையை ஏற்று, கடந்தாண்டு சட்டப்பேரவை யில் பாரதிபுரம் 66 அடி சாலை யிலிருந்து வெண்ணாம்பட்டியை இணைக்கும் வகையில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும் என  முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித் தார். தொடர்ந்து நிர்வாக ஒப்புதல் பெற தேவையான கருத்துரு  ரூ.36.15 கோடிக்கு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான நில எடுப்புப்பணிகள்  முடிவடைந்தவுடன் அதற்கான பணிகள் தொடங்கப்பட உள்ளன. அதேபோல, தருமபுரி புறநகர்  தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில்  உள்ள தடங்கம், பாலஜங்கமன அள்ளி, அதகப்பாடி ஆகிய கிராமங் களில் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப் பளவில் அமைய உள்ள சிப்காட்  பகுதியில் ஒன்றிய அரசின் சுற்றுச்சூ ழல் தடையில்லா சான்று கிடைத்த வுடன் பல்வேறு முன்னணி தொழிற் சாலைகள் இங்கு அமைய உள் ளன. தனியார் மின்கல வாகன உற் பத்தி நிறுவனம் 700 ஏக்கர் பரப்ப ளவில் தொழில் தொடங்க முன்ப திவு செய்துள்ளது. சிப்காட்டில்  அமைய உள்ள தொழிற்சாலைக ளில் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த படித்த இளைஞர்கள், பெண் களுக்கு முன்னுரிமை வழங்க நட வடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரு கிறது. தருமபுரி சிப்காட்டில் அமைய உள்ள தொழிற்சாலைகள் மூலம் கிடைக்கப் பெறும் வேலை வாய்ப்பை பயன்படுத்தி தருமபுரி தொழில் வளர்ச்சியில் வேகமாக வளரும் நிலை ஏற்படும். ஈச்சம்பாடி தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஈச்சம்பாடி அணைக்கட்டிலிருந்து வெளியேறும் மழைக்கால வெள்ள மிகை நீரை சின்னப்பம்பட்டி, நவலை, சிந்தல்பாடி ஏரிகளுக் கும், மொரப்பூர், அரூர், பாப்பிரெட் டிப்பட்டி பகுதிகளிலுள்ள ஏரிகள், குளங்களுக்கும் நீரேற்றம் செய்வ தன் மூலம் விவசாய நிலங்கள் பெரி தும் பயன்பெறும். இத்திட்டம்  குறித்து தற்போது விவாதிக்கப்பட் டுள்ளது. இத்திட்டத்தை நிறை வேற்ற தமிழக அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது, என்றார். முன்னதாக, இந்த ஆய்வில் ஆட் சியர் கி.சாந்தி, தருமபுரி நாடாளு மன்ற உறுப்பினர் ஆ.மணி, வரு வாய் அலுவலர் செ.பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அ.சிவகுமார், அரசு அலுவலர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். 

;