districts

img

நீலகிரியில் களைகட்டும் ஓணம் பண்டிகை

உதகை, செப்.7- ஓணம் பண்டிகை செப்.8 ஆம் தேதி (இன்று) கொண்டாடப் பட உள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்தில் மக்கள் கொண் டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கேரள மக்களின் முக்கிய பண்டிகையான ஓணம் பண் டிகை செப்.8 ஆம் தேதியன்று (இன்று) கொண்டாடப்படு கிறது. கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள நீலகிரியிலும் இந்த பண்டிகை களைகட்டத் தொடங்கியுள்ளது. கூடலூர், பந்த லூர், தேவாலா உள்ளிட்ட பகுதி கேரள எல்லையில் உள்ள பகுதிகளாகும். இங்கு கேரள மக்கள் அதிகம் வசித்து வருகி றார்கள். இங்கும், உதகை, குன்னூர் பகுதிகளிலும் ஓணம் பண்டிகை களைகட்டி உள்ளது. கேரள மக்கள் வீடுகள் முன்பு பல வண்ண மலர்களால் அத்தப்பூ கோலமிட்டு உற்சாக மாக கொண்டாடி வருகிறார்கள். இதேபோல பள்ளி, கல்லூரி களிலும் ஓணம் கொண்டாட்டங்கள் நடந்து வருகிறது. குன்னூர் பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரியில் அதிக அள வில் கேரளா மாணவிகள் படித்து வருவதால், கல்லூரியில் ஓணம் பண்டிகை புதனன்று கொண்டாடப்பட்டது. இதில்,  மாணவிகள் பட்டாசு வெடித்தும், திருவாதிரை களி நடனமாடி யும் செண்டை மேளம் முழங்க விழா கோலாகலமாக கொண் டாடப்பட்டது. இவ்விழாவில் அனைத்து பேராசிரியர்களும், மாணவிகளும் கலந்துகொண்டு உற்சாகமாக ஆடி மகிழ்ச்சி யடைந்தனர்.