districts

img

திருப்பூரில் ஓணம் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்

திருப்பூர், செப். 8 - திருப்பூரில் வசிக்கும் கேரள மக் கள் ஓணம் பண்டிகையை உற்சாக மாக கொண்டாடினர். ஓணம் பண்டிகையை முன்னிட்டு  வியாழக்கிழமை மாவட்ட நிர்வாகம்  உள்ளூர் விடுமுறை அறிவித்திருந் தது. இந்நிலையில் திருப்பூரில் வசிக் கும் கேரள மக்கள் தங்கள் வீடுகளில்  ஓணம் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடினர். குழந்தைகள் முதல்  பெரியவர்கள் வரை அனைவரும் புத் தாடை அணிந்து, வீடுகளின் முன்பாக  அத்தப்பூ கோலம் இட்டனர். உறவி னர்கள், புதுமணத் தம்பதியர் மற்றும்  நண்பர்களை வீடுகளுக்கு அழைத்து  விருந்து வைத்தனர். ஓணம் பண்டிகையின்போது 21  வகை உணவுகள் தயாரித்து விருந்தி னருக்குப் பரிமாறுவது வழக்கம் என் றும், அதன்படி இங்குள்ள கேரளத் தினர் வீடுகளில் தங்கள் உறவி னர்கள், நண்பர்களை அழைத்து விருந்து பரிமாறியதாகவும் அவர்கள்  தெரிவித்தனர். திருப்பூரில் கேரள சமாஜம், கேரளா கிளப் அமைப்புகள் சார்பில்  ஓணம் பண்டிகையின் தொடர்ச்சி யாக பொது நிகழ்ச்சியாக ஓணம் விழா ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வந்தது. எனினும் கொரோனா பொது  முடக்கத்துக்குப் பிறகு இந்த பொது  நிகழ்ச்சி நடத்துவது நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது. அதேசமயம் கேரளா கிளப்பி னர் புதன்கிழமை ஓணம் பண்டிகை  சார்ந்த சிறப்பு பாயாசம் விநியோகம்  செய்ததாகவும் அந்த அமைப்பினர் கூறினர். அனைத்து மக்களும் மகிழ்ச் சியாக வாழ வேண்டும் என்ற உயரிய  நோக்கத்துடன், மகாபலி மன்னன்  நினைவைப் போற்றி ஓணம் பண்டி கையை மக்கள் கொண்டாடினர். இரண்டு ஆண்டு கொரோனா பொது  முடக்கத்தில் இருந்து விடுபட்டு இந்த  ஆண்டு மகிழ்ச்சியுடன் சிறப்பாக  இந்த பண்டிகை கொண்டாடப்பட் டது என்றும் அவர்கள் தெரிவித்த னர்.

;