districts

img

ஓணம் பண்டிகை: மீன்கள் விலை வீழ்ச்சி

கோவை, செப்.4- ஓணம் பண்டிகையையொட்டி கோவையில் மீன்கள் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. கோவை உக்கடம் லாரி பேட்டையில் உள்ள மொத்த  மீன் மார்கெட்டில் கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் கேரள மாநில ஆகிய பகுதிகளில் இருந்து மீன்கள் கொண்டு வரப் பட்டு வியாபாரம் செய்யப்படுகிறது. கோவையில் உள்ள மீன் வியாபாரிகளும், பொதுமக்களும் இங்கு வந்து மீன்களை வாங்கி செல்கின்றனர். இந்நிலையில், ஓணம் பண்டிகை கார ணமாக கோவை உக்கடம் மீன் மார்கெட்டில் மீன்கள் விலை  குறைந்துள்ளது. இதுகுறித்து கோவை மாவட்ட மீன் வியா பாரிகள் கூறுகையில், தற்போது கேரளா மாநிலத்தில் ஓணம் பண்டிகை கலைகட்டியுள்ளது. ஆகையால் அங்கு மீன்கள்  வியாபாரம் குறைந்துள்ளது. ஆகையால், வியாபாரிகள் மீன் களை கோவை மொத்த மார்கெட்டிற்கு கொண்டு வருகின்ற னர். அதன் காரணமாக மார்கெட்டிற்கு தற்போது அதிகள வில் மீன்கள் வந்த வண்ணம் உள்ளது. இதனால் மீன்களின் விலை குறைந்துள்ளது. கடந்த வாரம் கிலோ ரூ.1000க்கு விற்கப்பட்ட வஞ்சரம் மீன் ரூ.800க்கு விற்கப்படுகிறது. கிலோ ரூ.350க்கு விற்கப்பட்ட நண்டு ரூ.150க்கு விற்கப்படுகிறது. கிலோ ரூ.320க்கு விற்க பட்ட பாறை ரூ.200க்கும், கிலோ ரூ.320க்கு விற்கபட்ட ஊளி ரூ.200க்கும், கிலோ ரூ.350க்கு விற்கப்பட்ட சின்ன சீலா ரூ.200க்கும், ரூ.3 ஆயிரத்திற்கு விற்கபட்ட ஒரு டிப்பர் மத்தி மீன் ரூ.2 ஆயிரத்திற்கும், ரூ.750க்கு விற்கப்பட்ட வாவல் மீன் ரூ.600க்கும் விற்கப்படுகிறது, என்றனர்.