பொள்ளாச்சி, நவ.29- பழங்குடியின மக்களுக்கு சான்றிதழ், பழு தடைந்துள்ள தொகுப்பு வீடுகளை சீரமைத்து தருவது உள்ளிட்ட அடிப்படை கோரிக்கை களை நிறைவேற்றாத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து செவ்வாயன்று பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கட்சி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தால் பரபரப்பு ஏற்பட்டது. பொள்ளாச்சியை அடுத்த, ஆனைமலை புலிகள் காப்பகம் வனச்சரத்துக்கு உட்பட்ட வால்பாறை, மானம் பள்ளி, டாப்சிலிப், கூமாட்டி, நகரூத்து, கீழ் பூனாச்சி உள்ளிட்ட பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளா கும். இப்பகுதிக்குட்பட்ட மலைவாழ் கிரா மங்களில் சேர்ந்த மக்கள் அடிப்படை வசதி கள் கேட்டு தொடர்ந்து கோரிக்கை மனுக் களை அளித்து வருகின்றனர். மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் மலைவாழ் மக்கள் சங்கம் ஆகிய அமைப்புளும் தொடர்ந்து போராடி வரு கிறது. ஆனால், மாவட்ட நிர்வாகமோ, வனத் துறையோ தொடர்ந்து இம்மக்களின் கோரிக் கைகளை நிராகரித்தே வருகிறது. இதனையடுத்து அடிப்படை வசதிகள் இல்லாமல் அவதியுறும் பழங்குடியின மக்க ளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியு றுத்தி செவ்வாயன்று பொள்ளாச்சி சார் ஆட்சி யர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட் டத்தில் ஈடுபடுவது என மார்க்சிஸ்ட் கட்சி அறைகூவல் விடுத்த்து. இதனையடுத்து, அதி காலை முதல் ஆனைமலை வனச்சரகத்திற் குட்பட்ட பல்வேறு மலைகிராமங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் பொள்ளாச்சி பேருந்து நிலையம் அருகே குவிந்தனர். இதனையறிந்து பொள் ளாச்சி சார் ஆட்சியர் அலுவலக வளாகத் தினுள்ளேயும், வெளியேவும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற் பட்டது.
இதனையடுத்து, மார்க்சிஸ்ட் கட்சியின் ஆனைமலை தாலுகா செயலாளர் வி.எஸ்.பரம சிவம் தலைமையில், மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட செயலாளர் சி.பத்மநாபன் முன்னிலையில் பழங்குடியின மக்கள் பேர ணியாய் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவல கம் நோக்கி வந்தனர். இவர்களை போராட்டத் திற்கு அனுமதி இல்லை என போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் லேசான தள்ளு முள்ளு ஏற்பட்டது. பின்னர் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு வெளியே மார்க் சிஸ்ட் கட்சியின் தலைமையில் பழங்குடியின மக்கள் சாலையில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அதி காரிகளுக்கு என்ன செய்வதென்றே தெரியா மல் அலறினர். இதனையடுத்து, 20 பேர் கொண்ட குழுவினர் பேச்சுவார்த்தைக்கு வரு மாறு பொள்ளாச்சி சார் ஆட்சியர் அழைப்பு விடுத்தார்.
இதனைத்தொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சி யின் மாவட்ட செயலாளர் சி.பத்மநாபன், ஆனைமலை தாலுகா செயலாளர் வி.எஸ்.பரமசிவம், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப் பினர் வி.ஆர்.பழனிச்சாமி உள்ளிட்ட குழுவி னர் சார் ஆட்சியர் பிரியதர்சினி முன்னிலை யில் வனத்துறையினர், பேரூராட்சி செயல் அலுவலர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பங் கேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையின் முடிவில், உட னடியாக வால்பாறை, வேட்டைக்காரன் புதூர், காளியாபுரம் உள்ளிட்ட ஐந்து பகுதி களை மையப்படுத்தி பழங்குடியின மக்க ளுக்கான சிறப்பு முகாம்கள் நடத்துவது, இம் முகாம் குறித்த தகவலை முன்கூட்டியே ஒலி பெருக்கி, தண்டோரா போட்டு பழங்குடி யின மக்களுக்கு தெரிவிப்பது என்றும், இந்த முகாமில் பழங்குடியின மக்களுக்கான சான் றிதழ் வழங்குவது உள்ளிட்ட பிரதான கோரிக் கைகளை கேட்டு நிவர்த்தி செய்வது என்றும், மேலும், பழங்குடியின கிராமத்திற்கு மின் வசதிகளை பொறுத்தவரையில், வனத்துறை அதிகாரிகளோடு, மின்வாரிய அதிகாரிகளும் கலந்து பேசி நடைமுறைப்படுத்துவது, பழுத டைந்த வீடுகளை சீரமைப்பது, வீட்டுமனை பட்டா உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து அர சின் கவனத்திற்கு கொண்டு செல்வது என்கிற உறுதியை அதிகாரிகள் அளித்தனர். இத னைத்தொடர்ந்து காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. இப் போராட்டத்தில், தமிழ்நாடு மலைவாழ் மக் கள் சங்க ஒன்றிய தலைவர் மணி, செயலா ளர் தங்கவேல், பொருளாளர் அம்சவேணி, மலைவாழ் இளைஞர் சங்கத்தின் எம்.சுரேஷ் குமார் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்ற னர். பழங்குடியின மக்களை திரட்டி மார்க் சிஸ்ட் கட்சி நடத்திய காத்திருப்பு போரட்டத் தால் பொள்ளாச்சி பகுதியில் பரபரப்பு ஏற் பட்டது.