சேலம், ஜூலை 02- சேலத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழ்நிலையில் கொரோனா கட்டுப்பாட்டு அறைகளை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின் றனர். சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் கொரோ னால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரு கிறது. இதனை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சுகாதாரத் துறை அறிவுறுத்தலின்படி மாவட்ட கொரோனா கட்டுப்பாட்டு அறைகளை திறக்க நடவடிக்கை மேற்கொண்டுவருகிறது. அதன்படி, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா கட்டுப்பாட்டு மையம் மற்றும் தனி வார்டு தயார் நிலையில் வைக்கப்பட் டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சேலம் மாவட்டத்தில் தற்போது 154 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் இதுவரை சேலம் மாவட்டம் முழுவதும் 12 5729 பேர் குணமடைந்துள்ளனர் ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 645 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு சேலம் மாவட்டத் தில் ஏற்பட்டுள்ளது. வெள்ளியன்று ஒரே நாளில் 33 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.