districts

img

நிலத்தடி நீர் தொழிற்சாலைகளுக்கு விற்பனை! குடிநீர் குழாய் இணைப்பை தூண்டித்த அதிகாரிகள்

நாமக்கல், மே 21- சட்டவிரோதமாக நிலத்தடி நீரை விற்ப னைக்கு பயன்படுத்தி வந்ததை கண்டறிந்து,  ஆழ்துளை கிணற்றின் குடிநீர் குழாய் இணைப்புகளை அதிகாரிகள் துண்டித்து சீல்  வைத்தனர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் பகுதியில் காவிரி ஆறு ஓடுகிறது. காவிரி  ஆற்றங்கரையோரம் ஏராளமான விவசாயி கள் விவசாய பணிகளை மேற்கொண்டு வரு கின்றனர். மேலும், குடிநீர் மற்றும் விவசாய தேவைக்காக காவிரி ஆற்று நீரை பயன்ப டுத்தி வருகின்றனர். காவிரியில் தற்பொழுது  நீர்வரத்து குறைந்த உள்ளது. இந்நிலையில்,  ஆற்று கரையோர பகுதி உள்ள களிய னூர் கிராமத்தில், விவசாயத்திற்கு நீரை  பயன்படுத்துவதாக கூறி, நில உரிமையாளர் கள் சிலர் ஆழ்துளை கிணறு அமைத்து அதன்  மூலமாக நிலத்தடி நீரை தினசரி டேங்கர் லாரிகள் மூலம் நாமக்கல் மாவட்டத்தின் பல் வேறு பகுதி, கல்லூரிகளுக்கும், வணிக, வர்த்தக, நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதாக புகார் எழுந்தது.  இந்த புகாரையடுத்து, மாவட்ட ஆட்சி யர் உத்தரவின் பேரில், நீர்வளத் துறை நீர் நிலை கோட்ட  சேலம் செயற்பொறியாளர் தலைமையில், களியனுர் கிராமத்தில் சங்கர், சிவசுப்பிர மணி, தெய்வ சிகாமணி, பூபதி, சம்பூர ணம், உள்ளிட்டோருக்கு சொந்தமான இடத் தில் சட்டவிரோதமாக நிலத்தடி நீரை விற்ப னைக்கு பயன்படுத்தி வந்ததை கண்டறிந் தனர். இதனையடுத்து, ஆழ்துளை கிணற் றின் குடிநீர் குழாய் இணைப்புகளை அதி காரிகள் துண்டித்து சீல் வைத்தனர். இது  சமய சங்கிலி மற்றும் கலியனூர் கிராமங்க ளில் மொத்தமாக 15-க்கும் மேற்பட்ட இடங் களில் நிலத்தடி நீர் இணைப்பு குழாய் துண்டிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது.  இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது, காவிரி ஆற்றில் விவசாயத்திற்காக நீர் எடுக்க  அனுமதி பெற்று, தண்ணீரை தினமும் லாரி களில் கொண்டு சென்று விற்பனை செய்வது  குறித்து விரையில் விசாரணை மேற்கொண்டு  நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

;