districts

img

அக்.11 மனித சங்கிலி ஆலோசனைக் கூட்டம்

குமாரபாளையம், அக்.7- மதவெறி சாய்ப்போம், மக்கள் ஒற்றுமை காப்போம் என வலியுறுத்தி அக்டோபர் 11ஆம் தேதியன்று சமூக  நல்லிணக்க மனித சங்கிலி குறித்து  ஆலோசனைக் கூட்டம் குமார பாளையம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.  ஆலோசனைக் கூட்டத்திற்கு, நகர காங்கிரஸ் தலைவர் ஜானகிராமன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கட்சி யின் நகர செயலாளர் சக்திவேல்,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர  செயலாளர் கணேஷ் குமார், செல்வ ராஜ், வழக்கறிஞர் கார்த்தி, விடுதலை  சிறுத்தைகள் கட்சியின் பிரபு, ராம் குமார், திராவிடர் கழகம் சரவணன், திவிக சாமிநாதன், மதிமுக நகரச் செயலாளர் நீலகண்டன் , சிபிஐ (எம்எல்)  பொறுப்பாளர் முருகன், விதொச துரை சாமி, மாற்றுத்திறனாளிகள் அமைப்பு முருகேசன், தமுஎகச சரவணன், சிஐடியு வெங்கடேசன், சண்முகம், கட்டு மான சங்கம் கந்தசாமி, சக்திவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், வருகிற 11ஆம்  தேதி மாலை 4 மணி அளவில் ஆனங்கூர்  பிரிவு சாலையில் இருந்து பள்ளி பாளையம் பிரிவு, நகராட்சி காந்தி சிலை  வரை மனித சங்கிலி நடைபெறும். இதில்  குமாரபாளையம் வட்டாரத்தில் உள்ள  அனைத்துப் பகுதி மாணவ, மாணவி கள், இளைஞர்கள், வியாபாரி மற்றும்  பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ளு மாறு அழைப்பு விடுக்கப்பட்டன.

;