districts

img

லக்கம்பூர்கேரி விவசாயிகள் படுகொலை நினைவு தினம் அனுசரிப்பு

திருப்பூர், அக். 3 -  லக்கிம்பூர்கேரி விவசாயிகள் படு கொலை நினைவு தினத்தை முன்னிட்டு, திருப் பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் ஐக்கிய விவ சாயிகள் முன்னணி (எஸ்.கே.எம்) சார்பில் கண்டன கூட்டம் நடைபெற்றது. மோடி அரசின் மூன்று விவசாய விரோத  சட்டங்களை எதிர்த்து போராடிய உத்தரப் பிரதேசம் மாநிலம், லக்கம்பூர்கேரியை சேர்ந்த 4 விவசாயிகள் மற்றும் 1 பத்திரிக் கையாளர், ஒன்றிய அமைச்சர் ஆஷிஷ் மிஷ் ராவின் மகன் கார் ஏற்றி படுகொலை செய் தார்.  இந்தப் படுகொலையின் ஓராண்டு நினைவு தினத்தையொட்டி அஞ்சலி நிகழ்ச் சியும், கண்டனக் கூட்டமும் ஐக் கிய விவசாயிகள் முன்னணி சார்பில் பெருமாநல்லூர் பேருந்து நிலையம் அருகில்  திங்கள் கிழமை காலை 10 மணியளவில் நடைபெற்றது.  தமிழ்நாடு விவசாயிகள் சங்க வடக்கு ஒன்றிய தலை வர் கே.ரங்கசாமி தலைமை வகித்தார். இந்நிகழ்வில் ஐக் கிய விவசாயி முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்.குமார், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.சின்னுசாமி, மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.வெங்க டாசலம் மற்றும் ஜி.கே.கேசவன், வடக்கு  ஒன்றிய செயலாளர் எஸ்.அப்புசாமி ஆகி யோர் கண்டன உரை நிகழத்தினார்கள்.  இந்நிகழ்வில் த.வி.ச.மாவட்ட நிர்வாகி  எஸ்.கே.கொளந்தசாமி, ஒன்றிய பொருளா ளர் ஆறுமுகம், சிபிஐ ஊத்துக்குளி தாலுக்கா  செயலாளர் வி.ஏ.சரவணன் உட்பட திரளாக  கலந்து கொண்டனர். விவசாய தொழிலாளர்  சங்க நிர்வாகி பி.சீனிவாசன் நன்றி தெரிவித் தார்.