districts

img

சர்வதேச முதியோர் தினம் கடைபிடிப்பு

கோவை, அக். 1 -  சர்வதேச முதியோர் தினமான  அக்டோபர் 1 ஆம்தேதி ஓய்வூதியப் பாதுகாப்பு நாளாக ஓய்வூதியர் சங்கங்கள் கடைபிடிக்கப்படுகிறது. இதனையடுத்து உரிமைகளுக் கான கோரிக்கை முழக்க ஆர்ப் பாட்டம் கோவையில் சனியன்று நடைபெற்றது  கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பிஎஸ்என்எல் தலைமையக வளா கத்தில் மத்திய, மாநில, பொதுத் துறை ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இதில், அனைத்து மூத்த குடி மக்கள், ஓய்வூதியர்களுக்கு கௌரவமான வாழ்க்கை உத்தர வாதப்படுத்த வேண்டும். தரமான மருத்துவம், இருப்பிடம், குடிநீர், போக்குவரத்து வசதிகள் ஏற் படுத்த வேண்டும். பழைய ஓய்வூதி யத்திட்டத்தை கொண்டு வர  வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை முன்வைத்தனர்.  ஒருங்கிணைப்புக்குழுவின் மாவட்ட தலைவர் என்.சின்னசாமி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு  மாவட்ட செய லாளர் என்.அரங்கநாதன் வரவேற் புரையாற்றினார். இதில், டிஎன்ஜிபிஏ எஸ்.மதன்,  டிஎன்எஸ்டிசி பி.சுரேந்திரன், பிஎஸ்என்எல்யு வி.வெங்கட் ராமன், மின்வாரிய சி.வி.மீனாட்சி  சுந்தரம், பள்ளி, கல்வி துறை ஏ. மாணிக்கம், அஞ்சல் எஸ்.கருணா நிதி உள்ளிட்டோர் உரையாற்றினர். முவில் ஒருங்கினைப்புக்குழுவின் மாவட்ட பொருளாளர் ஏ.குடியரசு நன்றி கூறினார். இதில் திரளான ஓய்வூதியர்கள் பங்கேற்றனர்.

தருமபுரி

இதேபோல், உலக முதியோர்  தினத்தை முன்னிட்டு மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் அமைப்புகளின் ஒருங் கிணைப்புக் குழு சார்பில் தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, ஒருங்கி ணைப்புக்குழு தலைவர் டி. பாஸ்கரன் தலைமை வகித்தார். தமிழ் நாடு அரசு ஓய்வூதியர் சங்க  மாவட்ட தலைவர் எஸ்.பழனி சாமி, மாவட்ட செயலாளர் எம். பெருமாள், போக்குவரத்து ஓய்வூ தியர் நல அமைப்பு, மாநில இணைச்  செயலாளர் கே.குப்புசாமி, பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்க மாநில உதவித் தலைவர் பி. கோபாலன், மின்வாரிய ஓய்வுப் பெற்றோர் நல அமைப்பின் மாவட்டச் செயலாளர் ஜி.பி. விஜியன்,மாவட்ட துணைத் தலைவர் டி.சிவம்,எல்ஐசி ஓய்வூ தியர் சங்க மாவட்ட தலைவர் ஏ. சோமசுந்திரம் ஆகியோர் கோரிக் கைகளை விளக்கி பேசினர். போக்குவரத்து ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் எம்.முனுசாமி நன்றி கூறினார்.

ஈரோடு

ஓய்வூதியர் தினத்தை முன் னிட்டு மத்திய, மாநில அரசு மற்றும்  பொதுத்துறை ஓய்வூதியர் அமைப்புகளின் ஈரோடு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் சார்பில், ஈரோடு டெலிபோன் பவன் முன்பு கடைபிடிக்கப்பட்டது. ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவர் என். மணிபாரதி நிகழ்ச் சிக்கு தலைமை வகித்தார். ஒருங் கிணைப்புக்குழுவின் செயலாளர் ராமசாமி, த.நா.அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தலைவர் எஸ்.சங்கரன், போக்குவரத்து ஓய்வூதியர் சங்க செயலர் எஸ். ஜெயராமன், பி.எஸ்.என்.எல்  சங்க மாநிலத் துணைச் செய லாளர் எல்.பரமேஸ்வரன், ஓய்வு  பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் சங்க செயலாளர் என்.நடராஜன், காப்பீட்டு ஓய்வூதியர் சங்கத்தின் நந்தகுமார், தட்சிண ரயில்வே ஓய்வூதியர்  சங்கத்தின் கோட்டச்  செயலர் சி.முருகேசன் ஆகியோர் கருத்துரை வழங்கினர். என்.சி.சி. பி.ஏ.வின் தலைவர் ஆர்.முரு கேசன், பி.எஸ்.என்.எல் சங்கத்தின் தலைவர் மாணிக்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஒருங் கிணைப்புக்குழுவின் பொரு ளாளர் வெள்ளியங்கிரி நன்றி கூறினார்.

சேலம்

இதேபோல்,ஓய்வூதியர் அமைப்புகளின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் சேலம் நாட்டாமை கழக கட்டிடம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இந்த ஆர்ப்பாட்டத்தை  மாநில  உதவி தலைவர் இரா.சுப்ர மணியம் துவக்கி வைத்தார். அஞ்சல் ஓய்வூதியர் சங்க மாநில  உதவித் தலைவர் என்.சண்முகம், பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்க மாநில உதவி செயலாளர் டி. பழனி உள்ளிட்ட திரளானோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண் டனர். 

உதகை

இதேபோன்று உதகையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ் நாடு மின்வாரிய ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் வி. மைக் கேல் தலைமை வகித்தார். கோரிக் கைகளை விளக்கி போக்குவரத்து ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர்  ராமன் அரசு துறை ஓய்வூதியர் சங்க  தலைவர்கள் சஞ்சீவிராஜ், ஓய்வூ தியர் சங்க தலைவர்கள் சங்கர லிங்கம், ராஜேந்திரன் ஆகியோர் பேசினர். அரசு துறை ஓய்வூதியர் சங்கத்தின் தலைவர் நாகராஜ் நன்றி கூறினார்.