தீயணைப்போர் தியாகிகள் தினம் அனுசரிப்பு
தீயணைப்போர் தியாகிகள் தினம் அனுசரிப்பு சேலம், ஏப்.14- தீயணைக்கும் பணியின்போது வீரமரணமடைந்தவர்க ளின் நினைவு தினம், ஆத்தூர் தீயணைப்பு நிலையத்தில் அனு சரிக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்.14 ஆம் தேதி நாடு முழுவதும் தீய ணைப்போர் தியாகிகள் தினம் அனுசரிக்கப்பட்டு வரு கிறது. அதன்படி, ஞாயிறன்று தீ விபத்து மற்றும் மீட்பு பணிக ளில் தைரியமாக செயல்பட்டு வீரமரணமடைந்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன்ஒருபகுதி யாக சேலம் மாவட்டம், ஆத்தூர் தீயணைப்பு நிலைய அலுவ லகத்தில் தீயணைப்புத்துறை மற்றும் மீட்பு பணிகள் துறை யின் பணியின்போது உயிர் நீத்தவர்களுக்கு நினைவஞ் சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி யில் தீயணைப்பு நிலைய அலுவலர் அசோகன் தலைமையி லான தீயணைப்பு வீரர்கள் அங்கு அமைக்கப்பட்ட கல்வெட் டுக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மலர் வளையம் வைத்து மலர்தூவி வீரவணக்கம் செலுத்தினர். இதே போன்று நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் தீயணைப் புத்துறை அலுவலகத்தில் சிறப்பு தீயணைப்புதுறை அலு வலர் தண்டபாணி தலைமையில் தியாகிகள் தினம் அனுசரிக் கப்பட்டது. இதில் பலர் கலந்து கொண்டனர்.
70 தென்னங்கன்றுகள் வெட்டிசாய்ப்பு
70 தென்னங்கன்றுகள் வெட்டிசாய்ப்பு நாமக்கல், ஏப்.14- மல்லசமுத்திரம் அருகே திமுக நிர்வாகி தோட்டத்தி லிருந்து 70 தென்னங்கன்றுகளை வெட்டி சாய்த்த நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர். நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் ஒன்றியம், மங்க ளம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் (56). இவர் திமுக விவ சாய அணி செயலாளராக உள்ளார். இவருக்கு சொந்தமாக சின்னகாளிப்பட்டியில் 5 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அந்த நிலத்தில் சுமார் 400 தென்னங்கன்றுகளை நட்டு வளர்த்து வந்தார். இந்நிலையில், அவரது நிலத்தில் இருந்த 70 தென் னங்கன்றுகளை அடையாளம் தெரியாத நபர்கள் வெட்டி சாய்த்துள்ளனர். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த செல்வம், இதுகுறித்து மல்லசமுத்திரம் காவல் நிலையத்துக்கு தக வல் தெரிவித்தார். அதன்பேரில் காவல் ஆய்வாளர் ரஞ்சித்கு மார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆய்வு மேற்கொண்டனர். மேலும், இதுகுறித்து வழக் குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
4 கிலோ வெள்ளிக்கொலுசு பறிமுதல்
4 கிலோ வெள்ளிக்கொலுசு பறிமுதல் சேலம், ஏப்.14- சேலத்தில் பறக்கும் படை சோதனையில், 4 கிலோ வெள் ளிக்கொலுசுகள் பறிமுதல் செய்யப்பட்டன. சேலம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த னர். அப்போது, அவ்வழியாக வந்த செவ்வாய்ப்பேட்டை யைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரது இருசக்கர வாக னத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், உரிய ஆவணங்க ளின்றி, ரூ.3 லட்சம் மதிப்புள்ள 4 கிலோ வெள்ளிக்கொ லுசுகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவற்றை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் கருவூலத்தில் ஒப்ப டைத்தனா். இதேபோல, அழகாபுரம் பகுதியில், அவ்வழி யாக வந்த காரை நிறுத்தி பறக்கும் படையினர் சோதனை நடத் தினர். அப்போது, கன்னங்குறிச்சியைச் சேர்ந்த கோவிந்த ராஜ் என்பவர் உரிய ஆவணங்களின்றி, ரூ. 1 லட்சத்து 44 ஆயிரம் எடுத்துச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து அந்த பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் கருவூ லத்தில் ஒப்படைத்தனர்.
போலீசார் தபால் வாக்கு செலுத்தினர்
போலீசார் தபால் வாக்கு செலுத்தினர் நாமக்கல், ஏப்.14- மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, நாமக்கல் மாவட் டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் நடைபெறும் வாக்குப்பதிவு பணியின்போது, அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், காவல் துறையினர், ஊர் காவல் படையி னர், முன்னாள் படை வீரர்கள், ஓய்வு பெற்ற தீயணைப்பு துறை யினர் மற்றும் வனத்துறையினர் ஆகியோர் பாதுகாப்பு பணிக் காக ஈடுபடுத்தப்பட உள்ளனர். தேர்தல் பாதுகாப்பு பணி யில் ஈடுபட்டுள்ள 492 காவலர்கள் மற்றும் 103 அரசு அலு வலர்கள் மற்றும் பணியாளர்கள், 124 நுண் பார்வையா ளர்கள் என மொத்தம் 719 நபர்கள் தபால் வாக்குப்பதிவு செலுத்தினர். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், அவர்கள் அனைவ ரும் சனியன்று தபால் வாக்கு செலுத்தினர். இந்நிகழ்வில் மாவட்ட தேர்தல் அலுவலர் ச.உமா, மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் ச.ராஜேஸ் கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தும்பல் கிராமத்தில் முதுமக்கள் தாழி கண்டெடுப்பு
சேலம், ஏப்.14- பெத்தநாயக்கன்பாளையம் அருகே உள்ள தும்பல் கிராமத்தில் பழந்தமிழர்களின் வாழ்வியலைச் சித்தரிக்கும் முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து சேலம் வரலாற்று ஆய்வு மையத்தினர் கூறுகையில், சேலம் மாவட் டத்தில் வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளை யம், கல்வராயன்மலை போன்ற பகுதிகளில் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் நாக ரிக வாழ்க்கை வாழ்ந்ததற்கு வரலாற்று தட யங்களாக நடுகற்கள், கல்வெட்டுகள், சதிக் கல், கல்திட்டைகள் ஏராளமாகக் காணக்கி டக்கின்றன. தற்போது தும்பல் கிராமத்தில் அரசினர் மேல்நிலைப்பள்ளி, அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு கால்நடை மருத்து வமனை அமைந்துள்ள பகுதிகளில் மலைக் குன்று அடிவாரத்திலுள்ள விளைநிலங்கள், அரசு புறம்போக்கு நிலங்களில் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்கள், இறந்துபோன முதியோர்களின் உடல்களை தடிமனான சுடுமண் பானைகளில் வைத்து நிலத்தில் குழி தோண்டி புதைத்துள்ளது தற் போது தெரியவந்துள்ளது. இறந்தவர்கள் உடல்களோடு அவர்கள் பயன்படுத்திய பொருட்களையும் சேர்த்து புதைத்துள் ளனர். இந்த ஈமத்தாழி நினைவுச் சின்னங்க ளைச் சுற்றி வட்டவடிவில் கற்களைப் பதித்து கல்வட்டங்கள் அமைத்துள்ளனர். இந்த இடங்களில் கட்டடப்பணிகள், வாய்க்கால் அமைக்கப்பட்டதாலும் பல கல்வட்டங்கள், இருந்த சுவடுகளே இல்லாமல் மறைந்து போனது. ஆனால், இன்றளவும் தும்பல் - கோட்டப்பட்டி பிரதான சாலையையொட்டி, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வடக்கு புறத்தில் தனியார் நிலத்தில் இன்றளவும் கல் வட்டங்கள் காணப்படுகின்றன. கரியக்கோ யில் ஆற்றங்கரையில் வாழ்ந்த மக்களின் தொல் பழங்கால வரலாற்றையும் அறிய முடி கிறது, என்றனர்.
மார்க்சிஸ்ட் கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரம்நாமக்கல், ஏப்.14- ஈரோடு தொகுதியில் போட்டியிடும் இந் தியா கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்ற னர். ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் இந் தியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாள ராக கே.இ.பிரகாஷ் களம் காண்கிறார். அவ ருக்கு ஆதரவாக திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கூட்டணி கட்சியினர் தொடர்ந்து தீவி ரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்ஒருபகுதியாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் குமாரபாளையம் நகரக்குழு சார்பில், இருசக்கர வாகன பிரச்சாரம் நடை பெற்றது. நகராட்சியில் உள்ள 33 வார்டு களிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியி னர் இருசக்கர வாகனத்தில் பிரச்சாரம் மேற்கொண்டனர். மேலும் விசைத்தறி தொழி லாளர்களை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர், கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசின் ஆட்சியால், சிறு குறு விசைத் தறி தொழில் கூடங்கள் குமாரபாளையத்தில் அதிகம் மூடப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி, பணம திப்பிழப்பு நடவடிக்கை உள்ளிட்டவற்றால் தொழில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதையும், விசைத்தறி ஜவுளி தொழிலே முழுமையாக அழியும் நிலை ஏற்பட்டதற்கு ஒன்றிய அரசு தான் காரணம் என எடுத்துரைத்து வாக்குசேக ரித்து வருகின்றனர். இதில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப் பினர் எம்.அசோகன், மாவட்டக்குழு உறுப்பி னர் எம்.ஆர்.முருகேசன், குமாரபாளையம் நகரச் செயலாளர் சக்திவேல், நகரக்குழு உறுப்பினர்கள் எஸ்.கந்தசாமி, என்.காளியப் பன், சரவணன், சண்முகம், மாதேஷ், கிளைச் செயலாளர்கள் மோகன், விசைத்தறி சங்க நிர்வாகி வெங்கடேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கொமதேக வேட்பாளருக்கு கூட்டணி கட்சியினர் வாக்குசேகரிப்பு
நாமக்கல், ஏப்.14- நாமக்கல் தொகுதி கொமதேக வேட்பாள ருக்கு வாக்குகேட்டு, இந்தியா கூட்டணி கட்சி யினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரு கின்றனர். நாமக்கல் மக்களவைத் தொகுதியில் இந் தியா கூட்டணி சார்பில் கொமதேக வேட்பா ளர் வி.எஸ்.மாதேஸ்வரன் உதயசூரியன் சின் னத்தில் போட்டியிடுகிறார். இவருக்கு வாக்கு சேகரித்து ராசிபுரம் நகர புதிய பேருந்து நிலை யம், உழவர் சந்தை பகுதிகளில் இந்தியா கூட்டணி கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சா ரத்தில் ஈடுபட்டனர். திமுக முன்னாள் இளைஞ ரணி துணை அமைப்பாளர் நெப்போலியன் என்கிற வி.பாலு தலைமையில் வாக்கு சேக ரிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிபிஐ நகரச் செயலாளர் மணிமாறன், பொருளா ளர் சலீம், துணைச்செயலாளர் கிருஷ்ண மூர்த்தி, திராவிடர் விடுதலைக் கழக நகரச் செயலாளர் பிடல் சேகுவேரா, திவிக வெண் ணந்தூர் ஒன்றியப் பொறுப்பாளர் ராமச்சந்தி ரன், திமுக நிர்வாகிகள் கார்த்திக், தங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
குப்பைக்கிடங்கில் பெரும் தீ விபத்து
குப்பைக்கிடங்கில் பெரும் தீ விபத்து நாமக்கல், ஏப்.14- ராசிபுரம் நகராட்சி திடக்கழிவு மேலாண்மை வளாகத்தி லுள்ள குப்பைக்கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில், அங்கிருந்த இயந்திரங்கள் தீக்கிரையாகின. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே நகராட்சி சார்பில் திடக்கழிவு மேலாண்மை வளா கம் செயல்பட்டு வருகிறது. ராசிபுரம் நகர்புறம் மற்றும் கிரா மப்புற பகுதிகளிலிருந்து மக்கும், மக்கா குப்பைகளை பிரித்தெடுக்க இதற்கென தனி மேலாண்மை அமைத்து பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஞாயிறன்று இங் குள்ள குப்பைக்கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் கழி வுப் பொருட்களை பிரிக்கும் அறையில் இருந்த 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள இயந்திரங்கள் மற்றும் வேஸ்டேஜ் பொருட்கள் தீக்கிரையாகின. இதன்பின் அங்கு பணிக்கு வந்தி ருந்த ஊழியர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரி வித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ராசிபுரம் தீயணைப்புத் துறையினர், தீயை அணைத்து கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதுகுறித்து ராசிபுரம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வி பத்தால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காணப்பட் டது.
சேலத்தில் பூத் சிலிப் வழங்கும் பணி நிறைவு
சேலத்தில் பூத் சிலிப் வழங்கும் பணி நிறைவு சேலம், ஏப்.14- சேலம் மாவட்டத்தில் வாக்குச்சாவடி தகவல் சீட்டு (பூத் சிலிப்) வழங்கும் பணி சனியன்றுடன் நிறைவடைந்தது. சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காசகா ரனூர் பகுதியில் வீடு வீடாகச் சென்று மாவட்ட தேர்தல் அலுவலர் இரா.பிருந்தாதேவி சனியன்று ஆய்வு மேற் கொண்டார். அப்போது அவர் கூறுகையில், வாக்காளர்கள் தேர்தல் நாளன்று தங்கள் வாக்குச்சாவடிகளுக்கு சென்று எளி தாக வாக்களிக்க ஏதுவாக தேர்தல் ஆணையத்தால் வழங்கப் பட்டுள்ள வாக்குச்சாவடி தகவல் சீட்டை அனைத்து வாக்கா ளர்களுக்கும் வழங்கிடும் வகையில், கடந்த ஏப்.1 ஆம் தேதி முதல் தொடர்புடைய உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அந்தந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் வீடு வீடா கச் சென்று வாக்காளர்களுக்கு வழங்கிடும் வகையில் பணி நடைபெற்று வந்தது. சேலம் மாவட்டத்தில் வாக்காளர்க ளுக்கு பூத் சிலிப் வெள்ளியன்று வரை 83.39 சதவிகிதம் பேருக்கு விநியோகம் செய்யப்பட்டிருந்தது. எஞ்சிய பணி கள் சனியன்றுடன் நிறைவடைந்தது. மேலும், வாக்காளர் தக வல் சீட்டுடன் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ஆணையத் தின் வாக்காளர் கையேடு வழங்கப்படுகிறது. வாக்காளர் தங்களது தகவல்களை சரிபார்க்கவுwம், வாக்காளர் பட்டிய லில் பெயர் இடம்பெற்றுள்ளதை அறிந்துகொள்ளவும் மட் டுமே வாக்காளர் தகவல் சீட்டை பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் உயிரிழப்பு
கோவை, ஏப்.14- கோவை போத்தனூர் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவா சன். இவர் பூண்டி வெள்ளியங்கிரி மலையின் மீது ஏறிய போது, அவருக்கு திடீர் உடல்நிலை குறைவு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த வனத்துறையினர், சுமை தூக்கும் தொழிலாளர்கள் உதவியுடன் அடிவாரம் தூக்கி வந்தனர். பின்னர் அங்கு உள்ள மருத்துவ முகாமில் பரிசோதித்த போது, சீனிவா சன் இறந்து போனதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து சீனிவாசன் உடல் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. வெள்ளி யங்கிரி மலை ஏறும் பக்தர்கள் தொடர்ந்து இறந்து வருவது பக்தர்களுடைய அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
சிபிஎம் இருசக்கர வாகன பிரச்சாரம்
திருப்பூர், ஏப். 14 - பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கே. ஈஸ்வரசாமிக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உடுமலை ஒன்றி யத்தில் சனிக்கிழமை பரப்புரை செய்யப்பட்டது. உடுமலை ஒன்றியம் முழுவதும் முழுநாள் வாக்குசே கரிப்பு பரப்புரை நடைபெற்றது. இரண்டு சக்கர வாகனப் பரப்புரைக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் உடுமலை ஒன்றியச் செயலாளர் கி.கனகராஜ் தலைமை ஏற்றார். கமிட்டி உறுப்பினர் ஏ.பாலதண்டபாணி வரவேற்றார். மார்க்சிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் செ. முத்துக்கண்ணன், மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ் ஆகியோர் பரப்புரை செய்து கொடியசைத்து தொடங்கி வைத்தனர். ஜனநாயகம்,மதச்சார்பின்மை, இந்திய அரசியல் சாசனம் பாதுகாக்கப்பட “இந்தியா” கூட்டணி வெல்ல வேண்டும் என தெரிவித்து, உதயசூரியன் சின்னத்தில் ஆதரவு கேட்டு பரப்புரை செய்யப்பட்டது. இதில் உடுமலை ஒன்றிய கமிட்டி உறுப்பினர்கள், மடத் துக்குளம் கமிட்டி உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள், கிளை உறுப்பினர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் இரு சக்கர வாகனங்களில் பங்கேற்றனர். இந்த பரப்புரையின் போது ஆயிரக்கணக்கான மக்களை சந்தித்து துண்ட றிக்கை கொடுத்து ஆதரவு திரட்டினர்.
அந்தியூரில் மார்க்சிஸ்ட் கட்சி வாக்கு சேகரிப்பு
அந்தியூரில் மார்க்சிஸ்ட் கட்சி வாக்கு சேகரிப்பு ஈரோடு, ஏப். 14- இந்தியா கூட்டணியின் சார்பில் திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் சிபிஐ வேட்பாளர் கே.சுப்பராய னுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கட்சியின் தாலுகா செய லாளர் ஆர்.முருகேசன் தலைமையில் வாக்கு சேகரிப்பு பணி நடைபெற்றது. இப்பிரச்சார இயக்கத்தை திமுக அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் துவக்கிவைத் தார். இதில், சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் பொள்ளாச்சி தமிழ்மணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.கோமதி, ஏ.எம்.முனுசாமி, காங்கிரஸ் கட்சியின் வட்டாரச் செயலாளர் அ.ச.நாகராஜன், மதிமுக தெற்கு ஒன்றியச் செயலாளர் ரகுபதி ஆகியோர் ஏன் மோடி ஆட்சி அகற்றப்பட வேண்டும் என விளக்கிப் பேசினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா ளர் ஆர்.ரகுராமன் நிறைவுரையாற்றினார். பேரூராட்சி கவுன்சிலர் கீதா, ஒன்றிய கவுன்சிலர் மயில்சாமி, ஏ.கே.பழனிசாமி மற்றும் தாலுகா கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
ஆவணங்கள் இல்லாத ரூ.10 லட்சம் பறிமுதல்
ஈரோடு, ஏப். 14- சித்தோடு அருகே உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.10 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. நாடாளுமன்ற தேர்தல் வருகின்ற 19 ஆம் தேதியன்று நடைபெறுகிறது. இந்நிலையில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொ ருட்கள் வழங்குவதை தடுக்கும் பொருட்டு பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழுவி னர் தீவிர கண்காணிப்பு மற்றும் வாகன சோத னையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஈரோடு மாவட்டம், சித்தோடு ஆவின் அருகே பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வீரப்பன்சத்திரத்தில் இருந்து பவானி நோக்கி ஏடிஎம் எந்திரங்களுக்கு பணம் கொண்டு செல்லும் வாகனம் சென்றது. அவ்வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த னர். அதில் ரூ. 10 லட்சம் பணம் இருந்தது. ஆனால் அப்பணத்தை உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்றது தெரிய வந்தது. இது குறித்து ஓட்டுநரிடம் கேட்டதற்கு, அவர் ஏடிஎம் எந்திரங்களுக்கு பணம் நிரப்ப ரூ. 67 லட்சம் கொண்டு சென்றதாகவும், அதில் ரூ. 64 லட்சம் ஏடிஎம் எந்திரத்தில் வைத்துள்ள தாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் அவர் கொடுத்த ஆவணங்களின்படி ரூ.3 லட்சம் மட்டுமே மீதம் இருக்க வேண்டிய நிலையில் ரூ. 10 லட்சம் இருந்ததால் சந்தேகமடைந்த அதிகாரிகள் ரூ.10 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
மூத்த குடிமக்களின் உரிமைகளை புதிய ஒன்றிய அரசு நிறைவேற்றும்
புதிதாகப் பொறுப்பேற்கும் ஒன்றிய அரசு மூத்த குடிமக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் என்று ஓய்வூதியர்கள் நம்பிக்கை அடைந்துள்ளனர். நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலையடுத்து புதிதாகப் பொறுப் பேற்கும் ஒன்றிய அரசு மூத்த குடி மக்களின் கோரிக்கையை நிறை வேற்றும். அஞ்சலகம் மற்றும் தேசிய மய மாக்கப்பட்ட வங்கிகளில், சிறு சேமிப்புக்கான வட்டியை தற்போ தைய ஒன்றிய அரசு வெகுவாகக் குறைத்துள்ளது. மூத்த குடிமக்களில் கணிசமானோருக்கு அவர்களது சேமிப்புக்கான வட்டி தான் ஒரே வரு மானமாக உள்ளது. இச்சூழலில் வட்டி குறைப்பு அவர்கள் வாழ்வாதா ரத்தை பாதிக்கிறது. ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப் படி குறைந்த பட்ச ஊதியம் ரூ.18 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்ட பிண்ண னியில், அனைத்து முதியோருக்கும் ரூ.9 ஆயிரம் மாத ஓய்வூதியமாக வழங்க வேண்டும் என எதிர்பார்க் கிறோம். மேலும் மூத்த குடிமக்க ளுக்கு வழங்கி வந்த, ரயில் பயண சலுகையை, கொரோனாவைக் காரணம் காட்டி ஒன்றிய அரசு ரத்து செய்து விட்டது. இப்போது கொரோனா இல்லாத சூழலில், நாட் டின் பொருளாதாரம் மேம்பட்டி ருப்பதாக அரசு கூறிக் கொள்கிறது. ஆனால் மூத்த குடிமக்களுக்கு பறிக் கப்பட்ட உரிமையை மீண்டும் வழங்க வில்லை. இந்நிலையில், புதிதாகப் பொறுப்பேற்க உள்ள அரசிடம் மூத்த குடிமக்களின் கோரிக்கை களை நிறைவேற்றும் எதிர்பார்க்கி றோம். மேலும், தேர்தல் நடத்தை விதி முறைகள் அமுலுக்கு வந்தவுடன், அமலாக்கத்துறை, போன்ற அரசு நிர்வாகம் முழுமையும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடும். அப்படியிருக்கும் போது, அமலாக்கத்துறை, கெஜ்ரி வால் போன்ற எதிர்க்கட்சித் தலைவர் கள் மீது, ரெய்டு நடத்துவது மற்றும் கைது செய்வது அப்பட்டமான விதி மீறலாகும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைத்திட்டத்தின் கீழ் தொழிலா ளர்களுக்கு தினக்கூலியை உயர்த்த வேண்டும் என, பல வருடங்களாக கோரிக்கை வைத்த போதும் ஏற்காத ஒன்றிய அரசு, தேர்தல் தேதி அறி விப்பிற்குப்பின் தினக்கூலியை ரூ.30 உயர்த்தியுள்ளது. தேர்தல் பத்திரங்கள் மூலம் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் மேலான நஷ்டத்தை சந்தித்த, 33 கம்பெனி கள், 2016-17 ஆம் ஆண்டு முதல் 2022- 23 ஆம் ஆண்டு வரை ரூ. 583 கோடியை அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாகக் கொடுத்துள்ளன. அதில் 75 சதவிகிதம் பாஜகவுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. லாபம் ஈட்டும் நிறுவனங்கள், தாங்கள் ஈட்டிய லாபத்தை விட அதிகமாக நன் கொடை கொடுத்துள்ளன. பல நிறு வனங்கள், சட்டத்தைமீறி, துவங்கப் பட்ட மூன்று ஆண்டுகளுக்கு முன் னரே நன்கொடை அளித்துள்ளன. சட்டத்தை மீறிய மற்றும் சந்தேகத் திற்குரிய நிறுவனங்கள் கணிசமான அளவு நன்கொடை அளித்துள்ளன. இதுபோன்று நன்கொடை அளித்த செயல் பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. நஷ்டமடைந்த நிறுவ னங்கள், கருப்புப்பணத்தை வெள் ளையாக்க இது போன்று நன்கொ டைகள் கொடுக்கப்பட்டனவா? நிதி அளித்த நிறுவனங்கள் தங்கள் வரவு செலவுக்கணக்கை, வருமான வரித் துறையிடம் மறைத்து, நீண்ட நாட்க ளாக வரி ஏய்ப்பில் ஈடுபட்டனவா? அமலாக்கத்துறை, மற்றும் வருமான வரித்துறையின் விசாரணை வளை யத்திற்குள் சிக்கிய நிறுவனங்கள், அதிலிருந்து தப்பிக்க, கைமாறாக ஆளும் கட்சிக்கு நிதி தரப் பயன்ப டுத்தப்பட்டனவா? ஒவ்வொரு தேர்தலுக்கு முன் னும், அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரம் செய்ய ஏதுவாக, இது போன்று நிதி பெறுகிறது. அனைத்து அரசியல் கட்சிகளும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் தீவிர பிரச்சா ரத்தில் ஈடுபட்டுள்ள சூழலில், தேர் தல் பத்திரத்தின் மூலம் நிதி கொடுத் ததன் விளைவுகளை ஆராய்ந்து வாக்களிப்பது, வாக்காளர்களின் கடமை. தேர்தல்கள் முடிந்து, புதிய அரசு பதவிக்கு வந்தவுடன், தேர்தல் பத்திரங்களை அளித்தவர்கள் மற்றும் பெற்றவர்கள் சட்ட மீறல்க ளில் ஈடுபட்டார்களா எனக் கண்ட றிவது அவசியம். ஒரு நியாயமான பிரச்சாரமும், தேர்தல் செலவுகளுக்கு அரசே நிதி அளிப்பதும், ஒரு ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு அவசியமான தாகும். -ராமசாமி ஓய்வு பெற்ற அஞ்சல் ஊழியர் சங்க நிர்வாகி
செந்நாய்களுக்கு மயிரிடர் தொற்று
உதகை, ஏப்.14- நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் தனக் கென ஒரு எல்லை கோடு அமைத்து வாழக்கூடிய வன விலங்கு செந்நாய்கள் ஆகும். செந்நாய்களை கண் டால் யானை, புலி, கரடி போன்ற வன விலங்குகள் கூட பயந்து ஓடிவிடும். செந் நாய்களுக்கு முதுமலை புலிகள் காப்பகம் வெளி மண்டல வனப்பகுதியில் வாழக்கூடிய செந்நாய்க ளுக்கு வறட்சி காலத்தில் ஏற்படக்கூடிய நோயான மயி ரிடர் எனப்படும் தொற்று பரவி வருகிறது. இது பொக்காபுரம் வனப் பகுதியில் வாழும் ஏழு செந் நாய் கூட்டத்தில் நான்கு நாய் களுக்கு இந்நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இத னைத் தொடர்ந்து கால்நடை மருத்துவ குழுவினர், வனத் துறையினர் ஒன்றிணைந்து வனப்பகுதிக்குள் நோய் ஏற்பட்டுள்ள செந்நாய்க ளைக் கண்டறியும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாரதிய ஜனதா கட்சிக்கு ஒரு கேள்வி?
கோவையில் உலக தர பல்கலைக்கழகத் திட்டம் எங்கே போனது?
கோவை, ஏப்.14- கோவைக்கு வர இருந்த 3000 கோடி உலக தர பல்கலைக்கழகத் திட் டம் எங்கே போனது? என மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில், அண்ணா மலைக்கு ஒரு கேள்வி முன்வைக் கப்பட்டுள்ளது. இதுகுறித்து, மறுமலர்ச்சி மக் கள் இயக்கத்தின் தலைவர் ஈஸ்வரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 2008 ஆம் ஆண்டு, ஒன்றியத் தில் காங்கிரஸ் ஆட்சி இருந்த போது, கோவையில் 500 ஏக்கர் பரப்பள வில் ரூ.3 ஆயிரம் கோடியில் உலக தர பல்கலைக்கழகத் திட்டம் தொடங் கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந் தியா முழுவதும் 14 நகரங்களில் இந்தத் திட்டம் நிறைவேற்ற போவ தாக அன்றைய அரசு அறிவித்தது. அதற்கான அடிப்படை பணிகளை, திட்டமிடுதல்களை தொடங்கிய பின்பு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. தற்போ தைய பாரதிய ஜனதா கட்சி அந்தத் திட் டத்தை மாற்றி, ஏற்கனவே இயங்கி வருகிற கல்வி நிறுவனங்களுக்கு குறைவான நிதியை வழங்கி, அந்த நிறுவனங்களை மேம்படுத்தலாம் என்று அறிவித்தது. ஆனால் அதுவும் நடக்கவில்லை. இதுகுறித்து பாஜக கல்வி அமைச்சரிடம் பல்வேறு தரப்பி னர் மனு அளித்தும், அரசு செவி சாய்க்கவில்லை. கோவைக்கு வர இருந்த மிகப் பெரிய கல்வி வாய்ப்பை பாரதிய ஜனதா கட்சி முடக்கியது. உலகத் தில் தரம் வாய்ந்த பல்கலைக்கழகங் களின் பட்டியலில் முதல் 200 இடங் களுக்குள் இந்தியாவின் எந்த பல் கலைக்கழகங்களும் இல்லை என்ப தால், இந்தத் திட்டத்தை கடந்த காங்கி ரஸ் ஆட்சி கொண்டு வந்தது. காங்கி ரஸ் கட்சியும் இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு காலம் தாழ்த்தி யது என்பது உண்மைதான். ஆனால் திறன் வாய்ந்த அரசு என்று சொல்லிக் கொண்டு இருக்கும் மோடியின் அரசு, கோவைக்கு அறிவித்த இந்த மிகப் பெரிய கல்வித் திட்டத்தை முடக்கி யது ஏன்? என்பதை அண்ணாம லையோ, மோடியோ விளக்க வேண் டும். ஏற்கனவே ஒன்றிய அரசு அறி வித்த மிகப்பெரிய கல்வித் திட்டத்தை கொண்டு வராமல், தற்போது தமிழ் நாட்டில் இரண்டாவது ஐஐஎம் (IIM) கோவையில் நிறுவப்படும் என்று சொல்வது வேடிக்கையாக இருக் கிறது என தெரிவித்துள்ளார்.
நுண்பார்வையாளர்களுக்கு பயிற்சி
நுண்பார்வையாளர்களுக்கு பயிற்சி ஈரோடு, ஏப்.14- பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்காணிப்பதற்காக 230 தேர்தல் நுண்பார்வையாளர்களுக்கு பயிற்சி அளிக்கப் பட்டது. ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட் டத்தில் உள்ள பதட்டமான வாக்குச்சாவடிகளை கண்கா ணிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள 230 தேர்தல் நுண்பார்வை யாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதனை மாவட்ட தேர்தல் பொதுப் பார்வையாளர் ராஜீவ் ரஞ்சன் மீனா முன்னி லையில், மாவட்ட தேர்தல் அலுலவர் ராஜ கோபால் சுன்கரா பயிற்சியை தொடங்கி வைத்தார். ஈரோடு மாவட்டத்தில், மொத்தம் 2222 வாக்குச்சாவடிகளில் 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. மேலும் வாக் குப்பதிவு நாள் அன்று இந்த பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்காணிக்க நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு, அவர் களுக்கான முதல்நிலை பணி ஒதுக்கீடு செய்யும் பணி கணினி மூலம் சுழற்சி முறையில் நடைபெற்றது. பயிற்சியின் போது, தேர்தல் நுண்பார்வையாளர்கள் தங்க ளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் தேர்தல் நாள் அன்று மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் மற்றும் கடைபிடிக்க வேண்டிய தேர்தல் நடத்தை விதிகள் உள்ளிட்டவை குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
கோவை, ஏப்.14- கோவையில் திரைக்கலைஞர் பிரகாஷ் ராஜ் இன்று இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம்
பாசிச பாஜகவை வீழ்த்திட இந் தியா கூட்டணியை வெற்றி பெறச் செய்யுங்கள் என்று கோவையில் திங்களன்று (இன்று) திரைக்கலைஞர் பிரகாஷ்ராஜ் உரையாற்ற உள்ளார். திரை உலகில் தனக்கென தனி முத் திரை பதித்த கலைஞராக பிரகாஷ்ராஜ் திகழ்கிறார். தோழர் கௌரி லங்கேஷ் படு கொலைக்கு பிறகு இந்துத்துவ, பாசிச பாஜகவை எதிர்த்து தீரத்துடன் களமாடி வருகிறார். ஒருபோதும் இனி இந்தியாவை பாஜக ஆளக்கூடாது என்கிற முனைப்பில் தொடர்ந்து கருத்துக்களை வெளிப்படுத்தி வருகிறார். இதன்தொடர்ச்சியாக இந் தியா கூட்டணியை ஆதரித்து கோவையில் இன்று (திங்கட்கிழமை) டாடாபாத், ஆறு முக்கு பகுதியில் மாலை 6 மணிக்கு உரை யாற்றுகிறார். தமிழக ஒற்றுமை மேடை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந் நிகழ்ச்சி தபெதிக பொதுச்செயலாளர் கு. ராமகிருட்டிணன் தலைமையில் நடை பெறுகிறது. இதில், தமிழக அமைச்சர் கள் முத்துசாமி, டி.ஆர்.பி.ராஜா மற்றும் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் தலைவர்கள், கோவை தொகுதி திமுக வேட்பாளர் கணபதி பா.ராஜ்குமார் மற் றும் மார்க்சிய, அம்பேத்கரிய, பெரியாரிய அமைப்பின் தலைவர்கள் பங்கேற்க உள்ள னர்.