districts

img

அங்கன்வாடி பள்ளி அருகே கழிப்பிடம் கட்டுவதற்கு எதிர்ப்பு : பொதுமக்கள் முற்றுகை

தாராபுரம், செப்.15- தாராபுரம் அருகே உள்ள ராமபட்டிணம்  அங்கன்வாடி பள்ளி அருகே பொது கழிப்பி டம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கொளத் துபாளையம் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தாராபுரம் அடுத்த கொளத்துப்பாளையம்  பேரூராட்சி அருகே உள்ள ராம பட்டினம் எனும் கிராமத்தில் 2500க்கும் மேற்பட்ட  பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர்.  ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளும்,  அங்கன்வாடி பள்ளியில் 50க்கும் மேற்பட்ட  மாணவ, மாணவிகளும் பயின்று வருகின்ற னர். இந்நிலையில் தற்போது அங்கன்வாடி  பள்ளி சமையலறையை ஒட்டி கொளத்துப்பா ளையம் பேரூராட்சி சார்பில் புறக்கழிப்பிடம் கட்ட ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதை யறிந்த அப்பகுதி பொதுமக்கள் கொளத்துப் பாளையம் பேரூராட்சி நிர்வாகத்திடம் அங் கன்வாடி பள்ளி அருகில் கழிப்பிடம் கட்டக்கூ டாது எனவும், பள்ளியில் பயிலும் மாணவர்க ளுக்கு பாதிப்பு ஏற்படும் எனவும் எதிர்ப்பு தெரி வித்தனர்.  மேலும் மாற்று இடத்தில் கழிப்பி டம் கட்ட வேண்டுமென வலியுறுத்தி மாவட்ட  ஆட்சியர் மற்றும் கொளத்துப்பாளையம் பேரூராட்சி செயல் அலுவலர், கொளத்துப் பாளையம் பேரூராட்சி தலைவர் ஆகியோ ரிடம் மனு அளித்தனர். ஆனால் எந்த நடவ டிக்கை எடுக்கப்படவில்லை. இதனை  கண்டித்து பொதுமக்கள் கொளத்துப்பாளை யம் பேரூராட்சி வளாகம் முன்பு முற்றுகை யிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து பரிசீலிக்கப்படும் என செயல் அலுவலர் தெரிவித்ததை தொடர்ந்து பொது மக்கள் கலைந்து சென்றனர்.

;