districts

பருவமழை: கட்டுப்பாட்டு மைய எண்கள் அறிவிப்பு

உதகை, மே 29– தென்மேற்கு பருவமழை தொடங்க இருப் பதால், நீலகிரி மாவட்ட நிர்வாகம் பேரிடர்  தடுப்பு நடவடிக்கைக்காக தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், நீலகிரியில், 2024 ஆம் ஆண்டிற்கான தென்மேற்கு பருவ மழை விரைவில் தொடங்குகிறது. இம்மாவட் டத்தில், 6 வட்டங்களில், அதிக பாதிப்பு ஏற்ப டக்கூடிய, 283 பகுதிகள் கண்டறியப்பட்டுள் ளது. இப்பகுதிகளை கண்காணிக்க, 42 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அக்குழு, 24 மணி நேரம் தயார் நிலையில்  இருக்க வேண்டும். என, அறிவுறுத்தப்பட்டுள் ளது. அவசர காலங்களில் பாதிக்கப்படும் பொதுமக்களை தங்க வைக்க, 456 பாதுகாப்பு  மையங்கள் தயார் நிலையில் உள்ளன. மீட்பு  மற்றும் நிவாரண நடவடிக்கைகளை உட னுக்குடன் மேற்கொள்ள வருவாய்துறை, உள்ளாட்சித் துறை, காவல் துறை, தீய ணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை,  நெடுஞ்சாலை, மின்சாரம், பொதுபணித் துறை, மருத்துவம் உள்ளிட்ட துறைகளை சார்ந்த அலுவலர்கள் தயார் நிலையில் உள்ள னர். இதனைத்தவிர, அனைத்து வட்டங்களில் 3500 முதல்நிலை மீட்பாளர்கள் மற்றும் ஆப் தமித்ர திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற 200  பேரிடர் கால நண்பர்கள் தயார் நிலையில் உள்ளனர். மேலும், மாவட்ட அவசர கால காட்டுபாட்டு மையத்தில் செயல்படும் கட்ட ணமில்லா தொலை பேசி எண், 1077 மற்றும்  0423 – 2450034, 2450035 க்கு பொதுமக்கள் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். ஆர்.டி.ஓ., மற்றும் வட்டாட்சியர் அலுவல கங்களிலும்  கட்டுப்பாட்டு மையங்கள் செயல் படுகிறது. அதன்படி, உதகை – 0423 –  2445577, உள்ளிட்ட எண்களில் தொடர்பு  கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

;