districts

img

திருப்பூரில் பீகார் தொழிலாளி கொலையுண்டதாக வதந்தி ரயில்வே காவல் நிலையத்தில் குவிந்த வடமாநில தொழிலாளர்கள்

திருப்பூர், மார்ச் 3 – திருப்பூரில் பீகார் தொழிலாளி கொலை செய்யப்பட்டதாக பரவிய வதந்தியைத் தொடர்ந்து வடமாநிலத் தொழிலாளர்கள் ரயில்வே காவல் நிலையத்தில் குவிந்தனர். பீகார் மாநிலத்தை சேர்ந்த ர.சஞ்சீவ் குமார் (37). திருப்பூர், போயம்பாளையம் பகு தியில் பனியன் தொழில் சார்ந்த உதிரிபாகக்  கடை நடத்தி வந்தார். இவர் வியாழனன்று இரவு திருப்பூர் ரயில் நிலையம் அருகில் ரயில்வே தண்டவாளத்தை கடக்க முற்பட்ட போது, ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார். இது  குறித்து ரயில்வே காவல் நிலையத்தார் வழக் குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண் டுள்ளனர். இந்நிலையில், வெள்ளியன்று பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஐம்ப துக்கும் மேற்பட்டோர் திருப்பூர் ரயில்வே காவல் நிலையத்தில் குவிந்தனர். சஞ்சீவ் குமாரை யாரோ கொலை செய்து தண்டவா ளத்தில் வீசிவிட்டு, அவரிடம் இருந்த இருசக் கர வாகனம் உள்ளிட்ட பொருட்களைத் திரு டிச் சென்றுவிட்டதாக அவர்கள் மத்தியில் தக வல் பரவியுள்ளது.  திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பா ளர் சசாங் சாய் மற்றும் மாநகர காவல் துணை  ஆணையர் அபிஷேக் குப்தா ஆகியோர் ரயில்வே காவல் நிலையத்தில் ஆய்வு மேற் கொண்டனர். மேலும் மாநகர காவல் துணை  ஆணையர் அபிஷேக் குப்தா செய்தியாளர்க ளுக்கு பேட்டியளித்தார். அவர் கூறுகையில்,  திருப்பூர் ரயில் நிலைய கண்காணிப்பு கேம ராவில் சஞ்சய்குமார் வந்து சென்றது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, காவல் நிலை யத்தில் குவிந்த தொழிலாளர்களிடம் சிசிடிவி  காட்சிகளை காண்பித்து இது விபத்துதான் என தெளிவுபடுத்தப்பட்டது. மேலும் அவரது  கைபேசி மற்றும் இருசக்கர வாகனம் போயம்பாளையத்தில் அவர் குடியிருக்கும் வீட்டில் இருந்தது உறுதிப்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து வடமாநில தொழி லாளர்கள் கலைந்து சென்றனர், என கூறி னார்.  கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் வட  மாநிலத்தவர்களை தாக்குவதாக பரப்பப்ப டும் வீடியோக்களின் காரணமாக, அவர்களி டையே அச்சஉணர்வு ஏற்பட்டுள்ளது. இதன்  காரணமாக அவர்கள் திருப்பூர் ரயில்வே காவல் நிலையத்தில் குவிந்தனர். இங்கு அனைவருக்கும் பாதுகாப்பு உள்ளது, ஏதே னும் பிரச்சனை என்றால் காவல் துறையைத்  தொடர்பு கொள்ளலாம் என்றும் அவர் தெரி வித்தார்.