districts

img

நீலகிரி மலை ரயில் தடம்புரண்டது: பயணிகள் அவதி

உதகை, ஜூன் 8- நீலகிரி மலை ரயிலில் கடைசிப் பெட்டி தண்டவாளத்தில் இருந்து வியாழனன்று தடம்புரண்டு, அடுத்த தண்டவாளத்திற்கு சென்றதால் மலை ரயில் ரத்து செய்யப்பட்டு, 175 சுற்று லாப் பயணிகள் பத்திரமாக இறக்கி விடப்பட்டனர். ஊட்டி என்றாலே குளுகுளு  கால நிலையும், பசுமையான மரங்களும்  அனைவரது மனதிலும் நினைவுக்கு வரும். இதனையடுத்து, நம் நினை வுக்கு வருவது நீலகிரி மலை ரயில். இந்த ரயிலில் பயணம் செய்வது  என்பது குழந்தைகள் முதல் பெரிய வர்கள் வரை அனைவருக்கும் மகிழ்ச்சி  தரக் கூடிய அனுபவம்.  அப்படிப்பட்ட, நீலகிரி மலை ரயில் குன்னூரில் இருந்து மேட்டுப் பாளையத்திற்கு  175 சுற்றுலாப் பயணி களுடன் கிளம்பியது. இந்நிலையில்,  தண்டவாளத்தில் இருந்து கடைசிப் பெட்டி அடுத்த தண்டவாளத்திற்கு இழுத்து சென்றதால் மலை ரயில்  நிறுத்தப்பட்டது.  இதில் பயணம் செய்த  175 சுற்றுலாப் பயணிகளும் பத்திரமாக ரயிலில் இருந்து இறக்கிவிடப்பட்டு, பேரூந்து மூலம் மேட்டுப்பாளையம் அனுப்பி வைக்கப்பட்டனர். முன்னதாக, புதனன்று, தமிழ்நாடு ஆளுநர் ரவி உதகை மலை ரயிலில் குடும்பத்தோடு பயணம் செய்தது குறிப் பிடத்தக்கது.