districts

ஓமலூர் அருகே துப்பாக்கி தயாரித்த வழக்கில் தேசிய புலனாய்வு முகமை திடீர் சோதனை

சேலம், அக்.7- ஓமலூர் அருகே துப்பாக்கி தயா ரித்த வழக்கில் கைது செய்யப்பட்ட வர்களின் வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் வெள்ளியன்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள புளியம்பட்டி பகுதி யில் காவல் துறையினர் கடந்த மே 20  ஆம் தேதியன்று வாகன சோதனை யில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சேலம் செவ்வாய்பேட் டையை சேர்ந்த சஞ்சய் பிரகாஷ், எரு மாபாளையம் பகுதியை சேர்ந்த நவீன் சக்கரவர்த்தி ஆகியோரிடம் காவல் துறையினர் சோதனை மேற் கொண்டனர். அப்போது அவர்களி டம் துப்பாக்கிகள் இருந்து கண்டு பிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதில், சேலம் செட்டிச்சாவடி பகுதி யில் உள்ள குரும்பம்பட்டி பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து துப்பாக்கி தயாரிப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து வீட்டில் துப்பாக்கி தயா ரிப்பதற்கான உதிரி பாகங்கள், முக மூடிகள், வெல்டிங் மிஷின், கையுறை கள் ஆகியவற்றை காவல் துறை யினர் பறிமுதல் செய்து,

இதற்கு  உடந்தையாக இருந்த அழகாபுரத் தைச் சேர்ந்த கபிலன் என்பவரை கைது செய்து சிறையில் அடைத் தனர். இதனிடையே அவர்களிடமிருந்து வீரப்பன், பிரபாகரன் ஆகியோரின் புத்தகங்கள் பறிமுதல் செய்தனர். மேலும், இவர்கள் தடை செய்யப் பட்ட இயக்கங்களின் தொடர்பில் இருக்கலாம் என போலீசாருக்கு சந் தேகம் ஏற்பட்டுள்ளது. இதனைய டுத்து தேசிய புலனாய்வு முகமை அதி காரிகள் இவ்வழக்கில் விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும், சென்னை பூந்தமல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு ஆவ ணங்கள் மாற்றப்பட்டது. இதனி டையே இந்த வழக்கில் கைதான கபி லன் என்பவர் ஜாமின் கிடைத்தது. இந்நிலையில், சேலம் மத்திய சிறை யில் உள்ள சஞ்சய் பிரகாஷ், நவீன் சக்கரவர்த்தி ஆகியோரிடம் கடந்த  ஆக.16 ஆம் தேதியன்று காணொலி  காட்சி வாயிலாக தேசிய புலனாய்வு  முகமை விசாரணை மேற்கொண் டது. அதனடிப்படையில் தேசிய புலனாய்வு முகாமை அதிகாரிகள் செட்டிச்சாவடி உள்ள குரும்பம்பட்டி பகுதியில் உள்ள வீட்டில் சோதனை செய்தனர் அப்போது ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. இந்நிலையில், இரண்டாவது முறையாக வெள்ளியன்று தேசிய  புலனாய்வு முகமையின் 6 பேர் குழு திடீர் சோதனை மேற்கொண்டது. துப் பாக்கி தயாரித்த வீட்டில் வேறு ஏதே னும் முக்கியமான ஆதாரங்கள், ஆவ ணங்கள் உள்ளனவா? என்று ஆய்வு செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.