districts

தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை

கோவை, ஜூலை 2- கோவை மாநகரில் தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற் கொள்ள சிறப்பு முகாம் ஞாயிறன்று முதல் ஜூலை 30 ஆம் தேதி வரை நடை பெற உள்ளது. இதுதொடர்பாக மாநகராட்சி ஆணை யர் மு.பிரதாப் வெளியிட்டுள்ள செய் திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, கோவை மாநகராட்சிக்குட்பட்ட 100  வார்டுகளில் தெருநாய்களை கட்டுப் படுத்தும் பணியானது, தொண்டு நிறு வனங்கள் மூலமாக மேற்கொள்ளப் பட்டு வருகிறது. இதில், கிழக்கு, தெற்கு மற்றும் மத்திய மண்டலங்கள், பிராணி மித்ரன் என்ற தொண்டு நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மேற்கு, வடக்கு மண்டலங்களுக்கு ஹியூமன் அனிமல் சொசைட்டி என்ற தொண்டு நிறுவனத் துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு தெரு நாய்களை பிடிக்க வாகனங்கள் வழங் கப்பட்டுள்ளன. மேலும், சீரநாயக்கன் பாளையம், ஒண்டிப்புதூர், உக்கடம் ஆகிய பகுதிகளில் ஆதரவற்ற நாய் களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சை மற்றும் வெறிநோய் தடுப்பூசி செலுத்த முகாம் நடைபெறுகிறது. தெருநாய்கள் சம்பந்தமான புகார் களை தெரிவிக்க 99444 34706, (பிராணி மித்ரன்), 93661 27215 (ஹியூமன் அனிமல் சொசைட்டி) ஆகிய தன்னார்வலர் களின் கைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். மேலும், சம்பந்தப்பட்ட மாநகராட்சி உதவி ஆணையர்கள், சுகாதார ஆய்வா ளர்கள் மற்றும் சுகாதார அலுவலர்க ளைத் தொடர்பு கொண்டும் புகார்  தெரிவிக்கலாம். சாலை மற்றும் தெருக் களில் போக்குவரத்துக்கும், மக்களுக் கும் இடையூறு ஏற்படுத்துவதால், தன் னார்வலர்களைக் கொண்டு வாகனங் கள் மூலமாக தெருநாய்களை பிடிக்க ஏற் பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. தன் னார்வலர்களுக்கு, மக்கள் முழு ஒத்து ழைப்பு வழங்க வேண்டும் என தெரி விக்கப்பட்டுள்ளது.