நாமக்கல், மார்ச் 27- நாமகிரிப்பேட்டை ஒன்றியம் மங்களபுரம் ஊராட்சியில் பள்ளி கட் டிடம் கட்டப்பட்டு சுமார் 15 ஆண்டுகள் கடந்து விட்ட பின்ன ரும், போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால் மாணவ, மாணவி கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வரு கின்றனர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட நாமகிரிப்பேட்டை ஒன்றியம் மங்களபுரத்தை அடுத்துள்ளது தாண்டாகவுண்டன் பாளையம் கிராமம். நாமக்கல் மாவட்டத்தில் கடைக்கோடியில் அமைந்துள்ள இக்கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்ற னர். இவர்களில் பெரும்பாலா னோர் விவசாயிகள், விவசாய கூலி தொழிலாளர்கள் மற்றும் மலை வாழ் மக்கள் ஆவார்கள். இப்பகுதி யில் அரசு ஊராட்சி ஒன்றிய நடு நிலைப் பள்ளி செயல்பட்டு வருகி றது. சுமார் 120 மாணவ, மாணவியர் கள் பயின்று வரும் இப்பள்ளியில் தலைமையாசிரியர் உட்பட மொத்தம் 6 ஆசிரியர்கள் உள்ள னர். இவர்களில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையில் 56 மாணவர்கள் பழைய கட்டிடத்திலும், 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாண வர்கள் 61 பேர் 500 மீட்டர் தொலை வில் கடந்த 2008 ஆம் ஆண்டு கட்டப் பட்ட புதிய கட்டிடத்திலும் கல்வி பயின்று வருகின்றனர்.
அதேநேரம், புதிய கட்டிடம் கட்டிமுடிக்கப்பட்டு சுமார் 14 ஆண்டு கள் நிறைவடைந்த நிலையிலும், இதுவரை கூடுதல் பள்ளி கட்டிடத் திற்கு மின்வசதி, குடிநீர் வசதி உள்ளிட்டவை செய்து தரப்பட வில்லை. மேலும், கழிவறை இருந் தும் தண்ணீர் இல்லாததால், மாணவ, மாணவிகள் 500 மீட்டர் தொலைவில் உள்ள பழைய கட் டிடத்திற்கோ அல்லது திறந்த வெளிப்பகுதியையோ தான் பயன் படுத்த வேண்டும் என்ற அவல நிலை இருந்து வருகிறது. இதனால் மாண வர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக, பள்ளி யின் அருகேயுள்ள குன்றுப் பகுதி யில் இயற்கை உபாதைகளை கழிக்க மாணவிகள் செல்லும் போது, அப்பகுதியைச் சேர்ந்த சமூக விரோதிகள் மூலம் பாலியல் சீண்டலுக்கு ஆளாவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாக பல பெற்றோர் தங்களது குழந்தைகளை பள் ளிக்கு அனுப்புவதற்கு தயக்கம் காட்டுகின்றனர். மேலும், இந்தப் பள்ளியின் சுற் றுச்சுவர் கட்டும் பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளதால் பாது காப்பற்ற சூழ்நிலை நிலவி வரு கிறது. குறிப்பாக, இரவு நேரங்க ளில் சமூக விரோதிகள் பள்ளியின் உள்ளே புகுந்து குடித்துவிட்டு மது பாட்டில்களை பள்ளி வளாகங்க ளில் போட்டு செல்கின்றனர். கடந்த 15 ஆண்டுகளாக நீடிக்கும் இந்த அவலநிலை குறித்து ஆட்சியர் கல்வித்துறை அலுவலர்கள் என பல அதிகாரிகளிடம் முறையிட்டும் தற் போதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படாமல் அதிகாரிகள் அலட் சியம் காட்டுவதாக பெற்றோர் கள் குற்றம்சாட்டுகின்றனர். ஆகவே, உடனடியாக மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளி கல்வித் துறை அதிகாரிகள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுத்து போதிய அடிப்படை வசதிகளை ஏற் படுத்திட வேண்டும் என கோரிக்கை கள் எழுந்துள்ளது.