கவிஞர் இராமலிங்கம் பிள்ளை பிறந்த தினம் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மரியாதை
நாமக்கல், அக்.19- நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை அவர்களின் 134 ஆவது பிறந்த நாள் முன்னிட்டு ஆட்சியர் ஸ்ரேயா பி. சிங் நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை அவர்களின் திருவு ருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். சிறந்த தமிழறிஞரும், கவிஞருமான கவிஞர் இராம லிங்கம் பிள்ளை “கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது” போன்ற தேசபக்திப் பாடல்களைப் பாடியவர். இவர், நாமக்கல் மாவட்டம், மோகனூரில் 19.10.1888 அன்று பிறந்தார். இவர் எழுதிய மலைக்கள்ளன் (நாவல்), காணா மல் போன கல்யாணப்பெண் (நாவல்), பிரார்த்தனை (கவிதை), நாமக்கல் கவிஞர் பாடல்கள், திருக்குறள் புதிய உரை உள்ளிட்டவை முக்கியமானவையாகும். பன்முகத்திறமை கொண்ட நாமக்கல் கவிஞர் இராம லிங்கம் பிள்ளை நாமக்கல் நகராட்சி, நாமக்கல் கவிஞர் இராம லிங்கம்பிள்ளை தெருவில், நாமக்கல் கவிஞர் இராமலிங் கம்பிள்ளை அவர்களின் நினைவில்லம் அமைந்துள்ளது. நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை அவர்களின் 134 ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, அவரது கவிஞர் இராமலிங்கம் பிள்ளை நினைவு இல்லத்தில், இவரின் உருவ படத்திற்கு ஆட்சியர் மலர்தூவி மரியாதை செலுத்தி னார். இந்நிகழ்வில், நாமக்கல் நகர்மன்ற தலைவர்.து.கலா நிதி உள்ளிட்ட திரளனோர் பங்கேற்றனர்.
பட்டாசு, இனிப்பு நிறுவனங்களில் ஆய்வு
கோவை, அக்.19- கோவையில் பட்டாசு விற்பனை மற்றும் காரம், இனிப்பு தயாரிக்கும் தொழிலகத்தில் குழந்தை தொழிலாளர்கள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கோவையில் பட்டாசு தொழிற்சாலைகள், இனிப்பு தயா ரிக்கும் நிறுவனங்கள் மற்றம் பட்டாசு விற்பனை நிலை யங்களில் குழந்தைகள் பணியமர்த்தப்பட்டிருப்பது தொடர் பாக மாவட்ட தடுப்பு படையினர், ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினர், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம், சைல்டு லைன் அமைப்பு, தொழிலாளர் துணை ஆய்வர்கள் மற்றும் தொழிலாளர் உதவி ஆய்வர்களால் மொத்தம் 33 நிறுவனங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டது. மேலும் மாவட்ட ஆட்சியருக்கு வந்த புகாரின் அடிப் படையில், கோவை செட்டி வீதி பகுதியில் உள்ள மோட்டார் வாகனம் பழுதுபார்க்கும் கடையில் ஆய்வு மேற்கொண்ட னர். இதில் ஒரு வளரிளம் பருவத் தொழிலாளர் மீட்கப் பட்டு குழந்தை நலக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. பணிக்கு அமர்த்திய நிறுவனத்தின் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள் ளப்பட்டுள்ளது.
பராமரிப்பு பணியால் ரயில்கள் போத்தனூர் வரை இயக்கம்
கோவை, அக்.19- கோவைக்கு இயக்கப்படும் 3 ரயில்கள் இன்று போத்த னூர் வரை மட்டுமே இயக்கப்படும் என ரயில்வே நிர்வா கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, கோவை ரயில் நிலையத்தில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் மேற் கொள்ளப்படுவதால் மதுரை, கண்ணூர், சொரனூரில் இருந்து இயக்கப்படும் ரயில்கள், போத்தனூர் வரை மட்டுமே இயக்கப்படும். அதன்படி, மதுரையில் இருந்து காலை 7.30 மணிக்குப் புறப்படும் மதுரை - கோவை ரயில் (எண்: 16722), கண்ணூரில் இருந்து காலை 6.20 மணிக்குப் புறப்படும். கண்ணூர் - கோவை ரயில் (எண்: 16607), சொரனூரில் இருந்து காலை 8.20 மணிக்குப் புறப்படும். சொரனூர் - கோவை ரயில் (எண்: 06458) ஆகிய 3 ரயில்கள் போத்தனூர் வரை மட்டுமே இயக்கப்படும். இந்த ரயில்கள் போத்தனூர் - கோவை இடையே இயக்கப்படாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
அனுமதி பெற்ற இடங்களில் மட்டுமே பட்டாசு விற்பனை
ஈரோடு, அக்.19- அனுமதி பெற்ற இடங்களில் மட்டுமே பட்டாசு விற்பனை செய்ய வேண்டுமென ஈரோடு மாவட்ட ஆட்சியர் அறிவு றுத்தியுள்ளார். தீபாவளிப் பண்டிகையினை முன்னிட்டு பட்டாசு கள் விற்பனை செய்ய தற்காலிக உரிமம் மற்றும் நிரந்தர உரிமம் கூடுதல் மாவட்ட நிர்வாக நடுவர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் மூலம் வழங்கப்பட்டுள்ளது. உரிமம் பெறப்பட்ட இடங்களில் மட்டுமே பட்டாசுகள் விற்பனை செய் யப்பட வேண்டும். பட்டாசு உரிமம் பெறப்படாமலும், உச்ச நீதிமன்றத்தால் தடைசெய்யப்பட்ட குடிமக்களின் ஆரோக்கி யத்திற்கு தீங்கு விளைவிக்கும் பச்சை பட்டாசுகள் (பேரியம் கலந்த) ரசாயன பட்டாசுகள் விற்பனை செய்யக்கூடாது. அவ்வாறு விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் வெடி பொருள் சட்டம் மற்றும் விதிகளின்படி தீவிர நடவடிக்கை மேற் கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் ஹெச்.கிருஷ்ண னுண்ணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருப்பூர் சார் ஆட்சியர் பதவியேற்பு
திருப்பூர், அக்.19 - திருப்பூர் சார் ஆட்சியராக ஸ்ருதுஞ்ஜெய் நாராயணன் புதனன்று பதவியேற்றார். நடிகர் சின்னி ஜெயந்த் மகனான இவர் திரைத்துறையை விடுத்து மக்கள் பணிக்கு வர தனது தாய், தந்தையரே காரணம், அவர்களுக்கு நன்றி என தெரி வித்தார். திருப்பூர் சார் ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ள ஸ்ரு துஞ்ஜெய் நாராயணன் திருப்பூர் குமரன் சாலையில் உள்ள சார் ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்றார். அவருக்கு சார் ஆட்சியர் அலுவலக பணியாளர்கள் வரவேற்பு அளித்து வாழ்த்து தெரிவித்தனர். சார் ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்ட ஸ்ருதுஞ் ஜெய் நாராயணன் பிரபல நடிகர் சின்னிஜெயந்த் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. பதவியேற்ற பின்னர் பேசிய அவர், மூத்த அதிகாரிகள் மற்றும் வருவாய் அலுவலர்களு டன் இணைந்து தனது முழு உழைப்பையும் திருப்பூருக்கு வழங்குவேன் என தெரிவித்தார். மேலும் திரைத்துறையை சேர்ந்த குடும்பம் என்றாலும் கல்விக்கு தனது பெற்றோர் எப்போதும் முக்கியத்துவம் அளித்ததால் தான் இந்த நிலையை அடைய முடிந்தது. அதற்கு தனது பெற்றோருக்கு நன்றி தெரிவித்தார். மேலும் நல்ல ஆசிரியர் மற்றும் நண்பர்களின் ஆதரவும் தனக்கு கிடைத்தது, அனைவருக்கும் நன்றி என தெரி வித்தார்.