கோவை, நவ.20- தொகுப்பு: முத்துவீரனன் தமிழக அரசு சார்பில் கலைஞர் நூற் றாண்டு விழாவின் ஒரு பகுதியாக “இதழா ளர் - கலைஞர்” மலர் வெளியீடு மற்றும் கருத் தரங்கம் கோவை இந்துஸ்தான் கலை அறிவி யல் கல்லூரியில் திங்களன்று நடைபெற் றது. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி விழாவிற்கு தலைமை வகித்தார். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர், “இதழாளர் - கலை ஞர்” நூற்றாண்டு விழாக் குழுத்தலைவர் மு.பெ.சாமிநாதன், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர், “இதழாளர் - கலைஞர்” நூற் றாண்டு விழாக் குழு இணைத் தலைவர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், பால்வளத்துறை அமைச்சர், “இதழாளர் - கலைஞர்” நூற் றாண்டு விழாக் குழு இணைத் தலைவர் த. மனோ தங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித் தனர். கவிஞர் வைரமுத்து, இந்து என்.ராம், பர்வீன்சுல்தானா, புலவர் செந்தலை ந.கவுத மன், நக்கீரன் கோபால், கவிஞர் கவிதாசன் ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர். இந் நிகழ்வில், கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, கோவை மாநகராட்சி மேயர் கல்பனா உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன் னதாக, செய்தி மக்கள் தொடர்பு மற்றும் அலு வலர் த.மோகன் வரவேற்றார். ஆற்றிய கே.ஜி. மருத்துவமனை தலைவர் பக்தவச்ச லம் மலரை வெளியிட, இந்துஸ்தான் கல் விக்குழுமங்களின் செயலர் சரசுவதி கண் ணையன் மலரை பெற்றுக்கொண்டார். இதனைத்தொடர்ந்து, ‘ஓய்வரியாத சூரி யன்’ என்ற தலைப்பில் கவிஞர் கவிதாசன், கலைஞர் கருணாநிதிக்கும் கோவைக்கும் உள்ள தொடர்பை மேற்கோள் காட்டி பேசி னார். ‘கலைஞரின் இதழியல் தமிழ்’ என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றிய புலவர் செந் தலை ந.கவுதமன், கலைஞர் கருணாநிதி யின் இதழியல் பணிகள் குறித்து பேசினார். ‘தலைமுறைகள் கடந்த கலைஞர்’ என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றிய பர்வீன்சுல் தானா, கலைஞரின் சமூகத் தொண்டு மற்றும் தமிழ் தொண்டு குறித்து உரையாற்றினார். ‘கருத்துரிமையும் கலைஞரும்’ என்ற தலைப் பில் சிறப்புரை ஆற்றிய நக்கீரன் கோபால், தனக்கும் கலைஞர் கருணாநிதிக்கும் உள்ள தொடர்பு பற்றி குறிப்பிட்டதோடு கலைஞ ரின் கருத்துரிமையினால் தான் நக்கீரன் தொடர்ந்து இயங்கி கொண்டிருப்பதை வெளிப்படுத்தினார்.
கருத்தரங்க தலைமையேற்று சிறப்புரை யாற்றிய கவிஞர் வைரமுத்து, கலைஞர், முதலமைச்சராக, சட்டமன்ற உறுப்பினராக, பொதுப்பணித்துறை அமைச்சராக அறிவிப்ப தற்கு முன்பு கலைஞர் தன்னை பத்திரிக்கை யாளராக அறிவித்துக் கொண்டவர் என்றும், அதுதான் அவரை இத்தனை உயரங்களுக்கு கொண்டு சென்றிருக்கிறது. தொல்காப்பியத் தில் குறிப்பிடப்பட்டுள்ள தமிழகத்தின் தென் எல்லை விவேகானந்தர் பாறையில் முடி கிறது என்று ஆன்மீக சாயம் பூசப்பட்டு வந்த போது, திருவள்ளுவர் சிலையை தமிழகத் தின் எல்லையாக நிர்ணயித்த கலைஞர், பூகோ ளத்தை உறுதி செய்து விட்டு சென்றிருக்கி றார் என்றும் கூறினார். சமூகநீதி தமிழ்நாட்டில் வென்றதாகவும் வடநாட்டில் தோற்றதாக வும் கூறிய வைரமுத்து அதற்கு சாட்சியாக பள்ளிகளில் சத்துணவு பரிமாறப்பட்டபோது தமிழ்நாட்டில் சமபந்தி கடைபிடிக்கப்பட்டதா கவும் வடநாட்டில் சாதியம் கடைபிடிக்கப் பட்டதாகவும் கூறினார். 4168 பக்கம் சுயசரிதை எழுதிய ஒரே தலைவர் கலைஞர் என்றும் நெஞ்சுக்கு நீதி, தமிழ்நாட்டு வரலாறு, பண் பாட்டு வரலாறு தமிழின் வரலாறு, சமூக நீதி வரலாறு, போராட்ட வரலாறு ஆகிய அனைத் தையும் உள்ளடக்கிய நூல் என்றும் அனை வரும் அதனை வாங்கி படிக்க வேண்டும் என்றார். முடிவில், கோவை மாவட்ட ஆட்சி யர் கிராந்திகுமார் பாடி நன்றி தெரிவித்தார்.